நிர்மலா சீதாராமன் மகள் ராணுவ அதிகாரியா ?

பரவிய செய்தி

தாய் ராணுவ அமைச்சர் ! மகள் ராணுவ வீரர்.

மதிப்பீடு

சுருக்கம்

நவம்பர் 7-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர்  தீபாவளி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் Raksha mantri-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதில், இப்படமும் இருக்கின்றது.

விளக்கம்

மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவ அதிகாரியாக பணியாற்றுகிறார் என பிஜேபிக்கு ஆதரவு அளிப்பவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன் உடன் பெண் ராணுவ அதிகாரி இருக்கும் புகைப்படம் முதலில் வட இந்தியாவில் அதிகம் பரவிய பின்பு தற்போது தமிழகத்திலும் பெருமையாக பேசப்படுகிறது.

ஆதரவாளர்களால் பெருமையாகக் கூறிக் கொண்டு பகிரப்படும் படத்தில் இருப்பது உண்மையில் மத்திய அமைச்சரின் மகளா என இணையத்தில் தேடுகையில் இல்லை என்ற பதில் கிடைத்தது. மேலும், அவரின் மகளின் விவரங்கள் கிடைத்தன.

நிர்மலா சீதாராமன் மகளின் பெயர் “ vangmayi parakala “. Youtube வீடியோ ஒன்றில் நிர்மலா சீதாராமனின் கணவர் மற்றும் மகள் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. vangmayi parakala ஒரு பத்திரிகையாளர் ஆவார், ராணுவ அதிகாரி அல்ல ! 

ஆக, வைரலான புகைப்படத்தில் இருக்கும் ராணுவ அதிகாரி மத்திய அமைச்சரின் மகள் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

படத்தில் இருப்பவர் யார் ?

வைரலான புகைப்படத்தில் இருப்பவர் பெண் ராணுவ அதிகாரி நிகிதா வீரைய்யா ஆவார். மத்திய ராணுவ அமைச்சருடன் நிகிதா எடுத்துக் கொண்ட புகைப்படமே வைரல் ஆகியது.

நவம்பர் 7-ம் தேதி மத்திய ராணுவ அமைச்சர் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய போது எடுத்துக் கொண்ட படங்கள் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது. அதில், வைரலான புகைப்படமும் உள்ளது.

“ படத்தில் இருக்கும் ராணுவ அதிகாரி மத்திய அமைச்சரின் மகள் அல்ல. புதிதாக  நியமிக்கப்பட்ட இளம் ராணுவ அதிகாரி மத்திய அமைச்சரின் அதிகாரப்பூர்வ வருகையின் போது எடுத்துக் கொண்டது “ என ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

ஆதரவாளர்கள் பெருமைப்படுவதில் தவறில்லை. ஆனால், தவறான செய்திகளை பரப்பி அதில் என்ன பெருமை தேடுகிறார்கள் என புரியாமல் உள்ளது.

தேர்தல் நேரம் ! உஷார் மக்களே ?

ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close