விலைவாசி உயர்விற்கு மக்களை கீதா சாரத்தை நினைக்கச் சொன்னாரா நிர்மலா சீதாராமன் ?

பரவிய செய்தி
தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதா சாரத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா இருக்கும் பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. ஆகையால், இந்நேரத்தில் கீதா சாரத்தின் வரிகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே கீதாச்சாரம் கார்ப்பரேட்டுகளுக்கு வரிதள்ளுபடியும் வங்கிக் கடன் தள்ளுபடியும் அவசியம் என்று சொல்லி இருக்கா மாமி. pic.twitter.com/TQz54nadJ2
— இரத்தினவேலு வசந்தா. (@vasantalic) May 12, 2022
உண்மை என்ன ?
மே 9-ம் தேதியிட்ட நியூஸ் கார்டு குறித்து பாலிமர் சேனலில் தேடுகையில், ” பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வருமா ? என்ற கேள்விக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனை செய்யும் ” என நிர்மலா சீதாராமன் பேசியதாகவே செய்தி வெளியாகி இருக்கிறது.
பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவது பற்றி நிர்மலா சீதாராமன் பேசியதாக வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர் .
முடிவு :
நம் தேடலில், தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதா சாரத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.