ஊட்டி மலை ரயில் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும் ?- மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன்
மதிப்பீடு
விளக்கம்
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான நீலகிரி மலை ரயில் தனியார் வசமாகி ஒரு டிக்கெட் ரூ.3000 விற்கப்படுவதாக கண்டனங்களும், சர்ச்சையும் எழுந்தது. ஆனால், ஒரு தனியார் நிறுவனம் மலை ரயிலை வாடகைக்கு மட்டுமே எடுத்து உள்ளதாகவும், தனியார் வசம் கொடுக்கவில்லை என தென்னக ரயில்வே தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : நீலகிரி மலை ரயில் தனியாருக்கு ஒப்படைத்ததாக பரவும் தகவல்| தென்னக ரயில் மறுப்பு !
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ” ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும் ? ” என்கிற கருத்தை கூறியதாக புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
ஆனால், இக்கருத்தை நிர்மலா சீதாராமன் கூறியதாக நாங்கள் செய்தி வெளியிடவில்லை என புதிய தலைமுறை செய்தி மறுப்பு தெரிவித்து உள்ளது. அப்படி எந்தவொரு கருத்தையும் அவர் கூறவில்லை. ஃபோட்டோஷாப் எடிட் மூலம் போலியான நியூஸ் கார்டை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.
வெங்காயம் சாப்பிடாததால் அதன் விலையேற்றம் குறித்து எனக்கு கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைதளங்களில், ஊடகச் செய்தியில் ஓர் தகவல் முன்பு வைரலாகியது.
மேலும் படிக்க : வெங்காயம் சாப்பிடாததால் கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?
அதை வைத்து நிர்மலா சீதாராமன் கூறியதாக போலியான நியூஸ் கார்டுகள் உருவாக்கப்பட்டு வைரல் செய்யப்படுகின்றன. நிர்மலா சீதாராமன் வெங்காயம் குறித்து பேசியது என்ன என்பதை நாம் முன்பே விரிவாக கட்டுரை வாயிலாக தெரிவித்து இருந்தோம்.