டாலரை பயன்படுத்தவில்லை, ரூபாயின் வீழ்ச்சியில் என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

பரவிய செய்தி

ரூபாயின் வீழ்ச்சி மக்களுக்கு என்ன கவலை. நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இந்திய ரூபாயைக் கொண்டுதான் வாங்குகிறீர்கள் பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை – நிர்மலா சீதாராமன்.

 Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இந்திய ரூபாயில் வாங்கும் போது எதற்கு டாலர் மதிப்பு பற்றி மக்களுக்கு என்ன கவலை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி, “என்னுடைய குடும்பம் மளிகை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை இந்திய ரூபாயில் வாங்குகிறோம், நாங்கள் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதில்லை. பிறகு எதற்காக நாங்கள் டாலர் மதிப்பு பற்றி கவலைப்பட போகிறோம் ” எனக் கூறியதாக ஆங்கிலத்திலும் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பற்றி நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துப் பற்றி புதிய தலைமுறை செய்தியின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை

அதுமட்டுமின்றி, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு புதிய தலைமுறையின் பழைய டெம்ப்ளேட் மாடல், மே 20-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளில் தேதி மட்டுமின்றி நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆகவே, இது போலியாக எடிட் செய்யப்பட்ட செய்தி என புரிந்து கொள்ள முடிந்தது.

Twitter link 

மேலும், நாங்கள் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதில்லை  இந்திய ரூபாயைதான் பயன்படுத்துகிறோம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக ஆங்கிலத்தில் பரவும் தகவல் போலியானது என பிஐபி ஃபேக்ட் செக் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இந்திய ரூபாயைக் கொண்டுதான் வாங்குகிறீர்கள் பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்றும், நான் இந்திய ரூபாயைதான் பயன்படுத்துகிறேன் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் செய்திகள் போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader