This article is from Dec 30, 2019

CAA-க்கு எதிராக போராடுபவர்களை இழிவுபடுத்தி நிதா அம்பானி ட்வீட் செய்தாரா ?

பரவிய செய்தி

2 – 4 ஆயிரம் நாய்கள் தெருவில் இறங்கி ஊளையிடுகிறார்கள் என்பதற்காக .NRC.CAB சட்டங்களிலிருந்து பின் வாங்காதீர்கள்.100 கோடி சிங்கங்கள் உங்களுடன் இருக்கிறார்ள்.
நிதா அம்பானி

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியா அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்காக போராட்டங்கள் தொடரும் தருணத்தில், முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி CAA மற்றும் NRC-க்கு ஆதரவாகவும், போராடுபவர்களை கொச்சைப்படுத்தியும் ட்வீட் பதிவை வெளியிட்டு உள்ளதாக ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி உள்ளது.

 

இந்திய அளவில் வைரலாக ட்விட்டர் பதிவால், பலரும் கண்டனங்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஜியோ நெட்வொர்க் சேவையை பயன்படுத்த வேண்டாம் என பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருவதை காண முடிந்தது.

உண்மை என்ன ? 

நிதா அம்பானி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டதாக பரவும் ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் போலியான ட்விட்டர் கணக்காகும். அந்த ட்விட்டர் பக்கம் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. குறிப்பாக, நிதா அம்பானி ட்விட்டர் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை.

@nitaambani என்ற பெயரில் பல்வேறு ட்விட்டர் கணக்குகள் இருக்கின்றனர் என்பதை அறிய முடிந்தது. மேலும், டிசம்பர் 20-ம் தேதி 17.6ஆயிரம் ஃபாலோயர்கள் கொண்ட @nitaambani என்ற ட்விட்டர் பக்கம் தவறான பதிவுகளையும், வெறுப்பு பதிவுகளை பகிர்ந்த காரணத்தினால் ட்விட்டர் தளம் நீக்கியுள்ளதாக ஸ்க்ரீன்ஷார்ட் உடன் ட்விட்டர் பக்கமொன்றில் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | archived link 

நிதா அம்பானி குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தன்னுடைய கருத்தினை பகிர்ந்ததாக முதன்மை செய்திகளில் ஏதும் வெளியாகவிலை. போலியான ட்விட்டர் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் வைரல் செய்யப்பட்டு சர்ச்சையாகி இருக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader