நடிகை நித்யாமேனன் தமிழ் நடிகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் எனக் கூறியதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
நித்யா மேனன் இதுவரைக்கும் அட்டென்ட் பண்ணாத ஒரே ஆடியோ லான்ச் மெர்சல்…. இன்னும் சொல்ல போன ஷூட்டிங் முடுஞ்சதுக்கு அப்பறம் அந்த பக்கமே எட்டி பாக்கல so connect the dot..
மதிப்பீடு
விளக்கம்
நடிகை நித்யாமேனன் தமிழ் திரையுலகில் உள்ள ஒரு நடிகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த செய்திகளில் “தமிழ் நடிகர் மீது நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றசாட்டு” என்றும், “நித்யா மேனன் இதுவரைக்கும் கலந்து கொள்ளாத ஒரே பாடல் வெளியிட்டு விழா என்றால் அது மெர்சல் தான்” என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
தமிழ் நடிகர் மீது நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றசாட்டு….#Jailer #Thalaivar171 #VidaaMuyarachi pic.twitter.com/mPPNnYML4z
— Spicy Chilli (@spicychilli4u) September 26, 2023
உண்மை என்ன ?
இதுகுறித்து நடிகை நித்யாமேனன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது ஒரு போலிச் செய்தி என்று குறிப்பிட்டு இந்த செய்தியை பதிவு செய்திருக்கிறார்.
அதில், “ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் அனைவரும் இத்தகைய செய்திகளுடன் இருக்கிறோம். எப்போதும் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது . இதற்கு பொறுப்பேற்று நான் பதில் கூறினால் மட்டுமே இதுபோன்ற மோசமான நடத்தைகள் நிறுத்தப்படும் என்பதால் இன்று இதை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். Buzzbasket, ursbuzzbasket, letscinema மற்றும் இதர ஊடகங்கள் இவ்வாறு பரப்பாமல் மனிதத் தன்மைகளுடன் இருக்க வேண்டும். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டு தன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இதே போன்று மற்றொரு பதிவிலும் தவறான செய்தி என்று குறிப்பிடப்பட்ட ஒரு புகைப்படத்தை குறிப்பிடப்பட்டு பதிவு செய்துள்ளதையும் காண முடிந்தது.
View this post on Instagram
மேலும் படிக்க : சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் எனப் பரப்பப்படும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : மார்ஃபிங் செய்யப்பட்ட அனிகா வீடியோ.. தெரிந்தும் ஏசியாநெட் வைத்த ஆபாச தலைப்பு!
இதற்கு முன்பாகவும், நடிகர், நடிகைகள் குறித்து பரவிய தவறான செய்திகளின் உண்மைத்தன்மை குறித்தும் யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நடிகை நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தனது பேட்டியில் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி வதந்தியே என்பதை அறிய முடிகிறது.