நித்தியானந்தா காலில் விழுவது அமித்ஷாவா ?| உண்மை என்ன?

பரவிய செய்தி
நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது, அமித்ஷா அவரை பிடித்து தடுத்த தருணம்.
மதிப்பீடு
விளக்கம்
நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பித்து அயல்நாட்டு தீவு ஒன்றில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நித்தியானந்தா குறித்த செய்திகளே பிரதானமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், Jacob Jack என்பவரின் முகநூல் பகிர்ந்த ஒருவர் பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் அதிகம் ஷேர் ஆகி வைரலாகி வருகிறது. உண்மையில், நித்தியானந்தா காலில் விழுவது மத்திய அமைச்சர் அமித்ஷாவா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், ” the rational hindu ” எனும் இணையதளத்தில் 2017-ம் ஆண்டில் ” What Tamil Nadu lost, Mauritius gained: Swami Nithyananda Gurukul and University ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை நமக்கு கிடைத்தது.
அந்த கட்டுரையில் இடம்பெற்ற இரண்டு புகைப்படங்களில், தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், கட்டுரையில் நித்தியானந்தாவுடன் இருப்பவர் இந்தியாவிற்கான மொரீசியஸ் நாட்டின் ஹை கமிஷனர் ஜெகதீஷ்வர் கோபுர்துன் எனக் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், இப்புகைப்படம் எடுக்கப்பட்டு இரண்டு ஆண்களுக்கு மேல் ஆகியுள்ளது.
Now let’s rewind a little to 2017. Have a look at this picture.
The High Commissioner of Mauritius in India – Mr. Jagdishwar Goburdhun – signed an MoU with the “godman” to open a Nithyananda Gurukul & Nithyananda University in Mauritius.
(2/8) pic.twitter.com/RhU7qpoFWD
— Saket Gokhale (@SaketGokhale) December 4, 2019
2017-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் , மொரீசியஸ் நாட்டில் நித்தியானந்தா குருகுலம் மற்றும் நித்தியானந்தா பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடுவது நிகழ்வு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, நித்தியானந்தா காலில் விழும் நபர் அமித்ஷா இல்லை, இந்தியாவிற்கான மொரீசியஸ் நாட்டின் ஹை கமிஷனர் ஜெகதீஷ்வர் கோபுர்துன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இப்புகைப்படம் 2017-ல் எடுக்கப்பட்டவை.