என்எல்சி இறுதி தேர்வு பட்டியலில் ஒரு தமிழன் கூட இல்லையா ?

பரவிய செய்தி
என்எல்சி இறுதி தேர்வு பட்டியலில் ஒரு தமிழன் கூட இல்லை. மொத்தம் இருந்த 29 பேரும் வட நாட்டுக்காரன் தான். தமிழகம் வடநாடாக மாறுகிறது எச்சரிக்கை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதிலும் மத்திய அரசு பணிகள் முழுவதும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற சர்ச்சை இங்கு எழுந்து கொண்ட இருக்கிறது.
சமீபத்தில், இதுபோன்ற சர்ச்சை ரயில்வே பணியில் எழுந்தது. தற்போது, மீண்டும் அப்படியொரு சர்ச்சை எழுகிறது. நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகியது. அதில்,மொத்தம் உள்ள 29 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தில் மத்திய பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல் வெறும் 29 பேரை மட்டும் கொண்டு வெளியிடப்படவில்லை. வெவ்வேறு தேதிகளில் மூன்று பட்டியலாக வெளியிட்டு உள்ளன.
என்.எல்.சி நிறுவனத்தால் கடந்த நவம்பரில் வெளியான பட்டியலில் செந்தில் குமார், பாலாஜி உள்ளிட்ட தமிழ் பெயர்கள் இருப்பதை பார்க்கலாம். என்.எல்.சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பிற பட்டியலின் லிங்க கீழே ஆதாரத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு வெளியிட்ட மூன்று பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. எனினும், பெரும்பாலானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
என்எல்சி-யில் பொறியியல் பிரிவில் உள்ள வேலைகளுக்கு GATE தேர்வுகளின் மதிப்பெண்கள் கட்டாயமாக இருக்கும். அந்த தேர்வுகளின் அடிப்படையிலேயே பட்டியல் தேர்ந்தெடுக்கப்படும். வேலைவாய்ப்பு விளம்பரத்திலும் இதனை குறிப்பிட்டு இருப்பர்.
மேலும், GATE தேர்வுகளை எழுதும் பொறியியல் மாணவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இந்தியர்கள் அனைவரும் என்எல்சி பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் இருப்பதை காணலாம். ஆனால், தமிழர்கள் ஒருவர் கூட இல்லை என்றுக் கூறுவது தவறாகும். செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.
ஆதாரம்