This article is from Jan 31, 2021

NO பாய் பிராண்ட் NO அனுமதி.. பரவும் SRM கல்லூரியின் போலி கடிதம் !

பரவிய செய்தி

SRMIST KTR கேம்பஸின் ஒவ்வொரு மற்றும் அனைத்து பெண்களும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய பாய் பிராண்ட் உடன் இருக்க வேண்டியது கட்டாயம். பாதுகாப்பது காரணங்களுக்காக இது கொண்டு வரப்படுகிறது. சிங்கிள் ஆக இருக்கும் பெண்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கள் பாய் பிராண்ட் உடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை கல்லூரிக்குள் நுழையும் போது காண்பிக்க வேண்டும் – SRM

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

SRM பல்கலைக்கழகத்தின் ஜனவரி 22-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கல்லூரிக்குள் பெண்கள் நுழைய வேண்டும் என்றால் கட்டாயம் பாய் பிராண்ட் இருக்க வேண்டும் என்கிற விதியை நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக இப்படியொரு அறிக்கை வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டன.

Twitter link | Archive link

ஆனால், இது உண்மையான கடிதம் அல்ல என்றும், விளையாட்டிற்காக யாரோ செய்த விஷம வேலை என்பதையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பிற மொழி சமூகவலைதளவாசிகளும் இந்த சுற்றறிக்கை கடிதத்தை வைரலாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பெண்கள் பாய் பிராண்ட் உடன் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் எனப் பரவுகின்ற சுற்றறிக்கை போலியானது என்றும், இப்படி பரவும் செய்தி குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் SRM பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

நையாண்டிக்காக இப்படி பல கல்லூரிகளின் பெயரில் போலியான சுற்றறிக்கையை தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள். வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் வரும் இதுபோன்ற போலியானவற்றை உண்மை என நினைத்து பலரும் பகிரவும் செய்து விடுகிறார்கள்.

பின்னர், அது போலியானது என ஒருசிலருக்கு தெரிய வந்தாலும், பலருக்கும் உண்மை எதுவென தெரியாமல் போய்விடுகிறது. தவறான செய்திகளை பகிர வேண்டாம்

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader