சென்னையில் ஏப்ரல் 24-ம் தேதி நிழல் இல்லாத நாள் !

பரவிய செய்தி

2019 ஏப்ரல் 24-ம் தேதி ” நிழல் இல்லாத நாள் ” என சென்னையில் கொண்டாடப்படுகிறது. அன்று மதியம் 12.07 மணிக்கு ,யாருக்கும் எந்த பொருளுக்கும் நிழல் இருக்காது.

மதிப்பீடு

விளக்கம்

இன்று ” நிழல் இல்லாத நாள் ” என்கிற அபூர்வ நிகழ்வு நிகழ்வதாக சமூக வலைதளங்களில், செய்தித்தாள்களில், ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. நிழல் இல்லாமல் எப்படி இருக்கும் என ஆர்வமாக இருப்பர்களுக்கு இது ஆச்சரியமான விசயமே! ஏப்ரல் 24 -ம் தேதி மதியம் 12.07 மணியளவில் சென்னையில் ” நிழல் இல்லாத நாள் ” நிகழ்வு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

” பூமிக்கு நேர்க்கோட்டில் சூரியன் 90 டிகிரி  கோணத்தில் சந்திக்கும் பொழுது போது அனைத்து பொருட்களின் நிழலும் அந்த பொருட்களின் நேர்கோட்டில் காணப்படும். சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் பொழுது நிழலின் நீளமானது பூஜ்ஜிய நிலைக்கு செல்கிறது. அதாவது நிழலானது பக்கவாட்டில் இல்லாமல் நேர் எதிராக காலுக்கு கீழே இருக்கும் “.

எனினும், இந்த நிகழ்வு நாள்தோறும் வருவதில்லை, ஆண்டிருக்கு இருமுறை மட்டுமே நிகழ்கிறது. மேலும், ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் நிகழ்வது இல்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. சூரியனின் வடநகர்வு மற்றும் தென்நகர்வு நாட்களில்  தலா ஒருமுறை என ஆண்டிற்கு இருமுறை நிகழ்கிறது.

2019 ஏப்ரல் 24-ம் தேதி நடக்க உள்ள இந்த நிகழ்வு சென்னையில் நிகழ உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது 12.07 மணியளவில் நடைபெறும் என கூறப்படுகிறது. எனினும், சில செய்திகளில் 12.09  மணி என்றும் குறிப்பிட்டு உள்ளனர். ஆகையால், அபூர்வ நிகழ்வை பரிசோதிக்க விரும்புபவர்கள் 12.05 முதல் 12.10 இடைப்பட்ட நேரத்தில் சோதித்து பார்க்கலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button