திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவிற்கு தடை விதித்தாரா ?

பரவிய செய்தி

ராஷ்ட்ரபதி பவனில் அசைவ உணவிற்கு தடை விதித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. தினமும் காலை 4 மணி பிரம்ம முகூர்த்தத்தில் தானே சிவ பூஜை ஆரத்தியை எடுத்து நாளை துவங்குவார் என்றும் ராஷ்டிரபதி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆமாம் இது ஹிந்து தேசம் தான்.

 Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரெளபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவிற்கு தடை விதித்து உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

” குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் அசைவ உணவு மட்டுமின்றி வெங்காயம், பூண்டு கூட உண்ணுவதில்லை என்பதால் சைவ உணவு வழங்கப்பட்டதாக ” ஜூலை 27-ம் தேதி பிசினஸ் ஸ்டான்டர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஆனால், திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவிற்கு தடை விதித்ததாக எந்தவொரு செய்தியோ அல்லது உத்தரவோ வெளியாகவில்லை. அவ்வாறு உத்தரவு பிறப்பித்து இருந்தால், அது அரசியல் களத்தில் பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கும்.

இதுகுறித்து மேற்கொண்டு தேடுகையில், ” குடியரசுத் தலைவர் மாளிகையில் எந்தவொரு அசைவ உணவு மற்றும் பானத்திற்கு முழுமையாக தடை எனப் பரவும் தகவல் வதந்தி. குடியரசுத்தலைவர் மாளிகையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை ” என PIB Fact Check ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.

Archive link 

முடிவு : 

நம் தேடலில், திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவிற்கு தடை விதித்ததாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader