This article is from Nov 20, 2020

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா ?

பரவிய செய்தி

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு ! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ” மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை ” எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Facebook link | Archive link  

+

உண்மை என்ன ? 

தீபாவளிக்கு அசைவ உணவு உண்பவர்கள் ஹிந்துக்களே அல்ல, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் தீபாவளிக்கு இறைச்சிக் கடைகள் மூடப்படும் என ஹெச்.ராஜா கூறியதாக தீபாவளியன்று வதந்தியை பரப்பினர். அது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா ?

தற்போது, மீண்டும் ஹெச்.ராஜா ” மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை ” எனக் கூறியதாக மீண்டும் வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். நவம்பர் 17-ம் தேதி வெளியான நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டை தேடிய பொழுது, ” விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு ! கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள் ; ஆன்மிகத்தை கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள் !” எனக் கூறியதாக நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.

Archive link  

கருணாநிதியின் மனைவி மற்றும் ஸ்டாலின் மனைவி குறித்து ஹெச்.ராஜா பேசியதாக வெளியான நியூஸ் கார்டில் மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை என எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader