நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீர வணக்கம் செலுத்தியதாக வதந்திப் பரப்பும் வலதுசாரிகள் !

பரவிய செய்தி

23 ஆம் ஆண்டு நினைவுநாள் ஏப்ரல் 25,2018. மானமறவன் அய்யா தானியங்கி சங்கர் அவர்களுக்கு வீர வணக்கம் – நாம் தமிழர் கட்சி

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாம் தமிழர் கட்சி சார்பில் தானியங்கி சங்கர்(ஆட்டோ சங்கருக்கு) 23ம் ஆண்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது என்று கிஷோர் கே சுவாமி ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை வலதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?
பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீர வணக்கம் செலுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவுகள் இருப்பதை பார்க்கலாம்.
.
தற்பொழுது வைரலான புகைப்படம் குறித்துத் தேடியதில், 2018 ஏப்ரல் 25 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் யாருக்கும் வீர வணக்கம் செலுத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
.
மேலும், வைரலான புகைப்படத்தை நன்கு கவனித்தால் அது போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது. நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும் எழுத்துரும்(Font) வலதுசாரிகளால் பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் எழுத்துரும் வெவ்வேறாக இருப்பதை நம்மால் காண முடிகிறது.
மேலும், வைரலான புகைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம்” எனப் பதிலளித்தார்.

Twitter link 

அக்டோபர் 18ம் தேதி சீமான் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில், ” எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! ” என வீரப்பனுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக போஸ்டர் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, ஆட்டோ சங்கருக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துவதாக போலியான போஸ்டரை வைரல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !

முடிவு :
நம் தேடலில், நாம் தமிழ் கட்சி சார்பில் வீர வணக்கம் செலுத்தும் புகைப்படத்தைப் போட்டோஷாப் செய்து ஆட்டோ சங்கருக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளனர் எனப் பொய்யான தகவலை வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர் என்பது தெரிய வருகிறது.
Please complete the required fields.
Back to top button
loader