அவர் நாடார் சமூகமே இல்லை… நாம் தமிழர் கட்சி போஸ்டரை ஃபோட்டோஷாப் செய்து வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி.கனகபிரியா என்பவருக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட ஆன்லைன் போஸ்டரில் ” நாடார் ஓட்டு நாடாருக்கே, நமது நாடார் குல வீரமங்கை ” போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக விமர்சிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியை விமர்சித்து பலரும் இப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து வாசர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
வைரல் செய்யப்படும் ஆன்லைன் பிரச்சார போஸ்டர் குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கையில், ” அது போலியானது. ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள். அவர் அந்த சமூகமே இல்லை ” என பதில் அளித்ததோடு நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை வெளியிட்ட விளக்கத்தையும், இதுதொடர்பாக அளித்த புகார் குறித்த தகவலையும் அளித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் சிவகாசி சட்டமன்ற வேட்பாளருக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் சாதியரீதியான முறையில் வாக்கு கேட்பது போன்று ஃபோட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே வைரல் செய்து வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் சிவகாசி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நாடார் சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு கேட்பதாக பரப்பப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது. அவர் அந்த சமூகமே அல்ல என்றும் அறிய முடிகிறது.