நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நடந்த இடத்தில் 57 பேரை நாய்கள் கடித்ததா ?

பரவிய செய்தி
நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய்க்கடித்ததாக புதிய தலைமுறை செய்தியின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாயின் பெயர் சீமானா என போலீசார் விசாரணை pic.twitter.com/41K4AAmuTh
— Tyler Durden (@sridhar_says) December 26, 2021
உண்மை என்ன ?
பரப்பப்படும் செய்தி குறித்து தேடுகையில், 2021 டிசம்பர் 26-ம் தேதி ” நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி ” என்ற தலைப்பிலே புதிய தலைமுறை சேனல் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி #Tanjore | #DogBite pic.twitter.com/EwCVf9Og5D
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 26, 2021
செய்தியில், ” தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அங்கு வந்த பொதுமக்களை நேற்று சுமார் 37 பேரைக் கடித்து உள்ளது. பொதுவாக பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் தொடர்ந்து தேங்கி இருப்பதால் தெருநாய்கள் அதிமாக திரிவதாக பட்டுக்கோட்டை மக்கள் புகார் அளித்து இருக்கின்றனர்.
இதற்கிடையில், நேற்று அரசு மருத்துவமனைக்கும், பேருந்து நிலையத்திற்கும் வந்த வயதான மக்களை தெரு நாய்களில் இருக்கின்ற வெறிநாய்கள் கடித்திருக்கின்றன. இதனால் நேற்று 37 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் 20 நபர்களை வெறிநாய்கள் கடித்து இருக்கின்றன. மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் வெறிநாய்களால் கடிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என இடம்பெற்று இருக்கிறது.
இதுகுறித்து புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்கையில், பட்டுக்கோட்டையில் நாய்க்கடியால் 57 பேர் பாதிக்கப்பட்டது குறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியில் இப்படி எடிட் செய்து இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி எனப் பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.