சீமான் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

பரவிய செய்தி
மானமிகு உயர்குடிபிறந்த மாவீரன். தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை தன் தோட்டாக்களால் நிறைவேற்றியப் போர்வீரன். இந்திய தேசத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அடையாள உருவாய் திகழும் ஐயா. நாத்தூரம் விநாயக் கோட்சே அவர்களுக்கு, தேசப்பிதா காந்தியின் பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம் ! – செந்தமிழன் சீமான்
மதிப்பீடு
விளக்கம்
காந்தி ஜெயந்தியன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக போஸ்டர் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று சீமான் உடைய ட்விட்டர் பக்கத்தில், ” தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம்! ” என்ற போஸ்டர் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது.
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம்! pic.twitter.com/Y3MpjvNPh9
— சீமான் (@SeemanOfficial) October 1, 2021
சிவாஜி பிறந்தநாளன்று வெளியிட்ட இந்த போஸ்டரில் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவது போன்று எடிட் செய்து தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோட்சேவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக பரப்பப்படும் போஸ்டர் போலியானது. சிவாஜி பிறந்தநாளன்று வெளியிட்ட போஸ்ட்ரில் எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.