நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கம் நிற்கும் என்றாரா சீமான் ?

பரவிய செய்தி

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் – சீமான்

மதிப்பீடு

விளக்கம்

தமிழரா.. திராவிடரா ? இன விடுதலை அரசியல் கருத்தரங்கத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும்  ” எனப் பேசியதாக IBC தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Twitter link | Archive link 

உண்மை என்ன ? 

நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு தொடர்பாக IBC தமிழ் உடைய முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அதுபோன்ற நியூஸ் கார்டுகள் கிடைக்கவில்லை. மாறாக, அதே நியூஸ் கார்டு வடிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

Facebook link 

அதில், ஆரியம்,திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான்!. இந்தியன், திராவிடம் இரண்டுமே எங்கள் தமிழ் தேசியத்தின் எதிரிகள், ஆரியம் வேறு இந்தியன் வேறு அல்ல ” என சீமான் பேசியுள்ளார்.

முடிவு : 

நம் தேடலில், திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரப்பப்படும் IBC தமிழ் நியூஸ் கார்டு போலியானது.

ஆரியம், திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே தங்களுக்கு எதிரி என்றே சீமான் பேசியுள்ளார் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button