ஒபாமா தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா?

பரவிய செய்தி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இப்போது ஒரு தனியார் அலுவலக வேலை செய்து கொண்டிருக்கிறார். நம்ம ஊருல ஒரு தடவ கவுன்சிலரானாலே அவன் பேரு சாவுறவரைக்கும் கவுன்சிலர் தான்.
மதிப்பீடு
சுருக்கம்
எந்த மீடியாவிலும் இது பற்றி செய்தி வரவில்லை. செய்தியில் பகிரப்படும் படம் அவர் ஜனாதிபதியாக இருந்த போது 2012 இல் பதிவிடபட்டது.
விளக்கம்
அமெரிக்காவில் 2009-இலிருந்து 2017 வரை இருமுறை ஜனாதிபதியாக இருந்தவர் பராக் ஒபாமா. உலக தலைவர்களில் மிக பிரபலமானவரும் முக்கியமானவருமாக கருதப்படுபவர் ஒபாமா. சமீபத்தில் ஒபாமா தனியார் துறையில் பணி புரிவதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு செய்தி மிக வேகமாக பரவியது.
அதில் பகிரப்படும் படத்தில் இருப்பது 2012-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி ஒபாமாவின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “#Reddit AMA-இல் ஜனாதிபதி ஒபாமா உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார்” என்று பதிவிடப்பட்டிருந்தது. இதிலிருந்து அவர் தனியார் துறையில் பணியாற்றும் போது எடுத்த படம் இல்லை என்பது தெளிவாகும்.
President Obama is answering your questions in a #Reddit AMA, starting right now: http://t.co/f00rEdkn, pic.twitter.com/Q5gWHTTM
— Barack Obama (@BarackObama) August 29, 2012
இதே போல் வேறு சில படத்துடனும் இந்த செய்தி பரவியது. இதில் அமெரிக்கா வாஷிங்டன் டிசி-இல் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உடன் முதன்மை பெண் மிசெல் ஒபாமா ஆயுதப்படை ஒய்வு இல்லத்தில் நன்றி செலுத்தும் விருந்தில் பங்கேற்ற படமும் ஒன்று.
அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் 8.1 மில்லியன் டாலர் மதிப்பிற்கு வீடு வாங்கினார். தற்போது உலகம் முழுக்க உரையாற்றி வருவதோடு புத்தகம் எழுதுவதிலும் கவனம் செலுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் Netflix உடனும் பெரிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.