This article is from Sep 30, 2018

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளா ?

பரவிய செய்தி

ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. இது மிகப்பெரிய அதிசயமாகும்.

மதிப்பீடு

சுருக்கம்

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத படங்களை வைத்து வதந்திகளை பரப்பியுள்ளனர்.

விளக்கம்

ஒரு பெண்ணின் வயிறு பெரிதாக உள்ள படத்தையும், ஒரே நாளில் பிறந்த 11 குழந்தைகள் படத்தையும் இணைத்து ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 11 குழந்தைகள்  பிறந்துள்ளன என்ற செய்தி பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. ஆனால் அந்தப் படங்களை நன்றாக கவனித்தாலே இரண்டிற்கும் தொடர்பில்லை என அறியலாம்.

ஒரு பெண்ணும் ஆணும் சாதாரணமாக இணைந்து குழந்தை பிறக்கும் முறையில் அல்லாமல் பெண்ணின் கருமுட்டைக்குள் நேரடியாக ஆணின் விந்தணுவை ஊசியின் மூலம் செலுத்தி கரு உருவாக்கம் நடைபெறும் முறையை In Vitro Fertilization (IVF) என்பர்.

சூரத்தில் நகரில் அமைந்துள்ள 21st Century (IVF) மருத்துவமனையில் 30 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 11 பெண்களுக்கு 2011 ஆம் ஆண்டின் முக்கிய நாளான 11.11.11 அன்று பிரசவம் நடைபெற ஏற்பாடுகள் செய்தனர். அன்றைய தினத்தில் 11 குழந்தைகள் பிறந்தன . அதை கொண்டாடும் விதத்தில் அன்று பிறந்த 11 குழந்தைகளுடன், அந்த மையத்தின் மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1200க்கும்  மேற்பட்ட தம்பதிகள் IVF முறையில் பயனடைந்துள்ளனர் என்று அம்மையத்தின் மருத்துவர் Dr.பூஜா அவர்கள் கூறியுள்ளார் .

கலிபோர்னியாவை சேர்ந்த 33 வயதான நத்யா சுலேமன் என்பவர் தனது பிரசவத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. குழந்தை வளரும் காலங்களில் பெண்களின் வயிறு பெரிதாக இருப்பது இயல்பானதே. ஆனால் இந்த படத்தில் உள்ள பெண்ணிற்கு வயிறு  மிகப்பெரிதாக இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதற்கான காரணம் என்னவென்றால் இப்பெண் IVF முறையில் எட்டு குழந்தைகளை வயிற்றில் சுமந்துள்ளார். இவருக்கு ஜனவரி மாதம் 2009 ஆண்டில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அணைத்து குழந்தைகளும் நலமாகவும், தேக ஆரோக்கியத்துடனும் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 இவ்வாறு தொடர்பில்லாத இரு படங்களை இணைத்து சிலர் தவறான செய்திகளை வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader