This article is from Aug 17, 2020

பழைய தங்கத்திற்கு 3% ஜி.எஸ்.டி வரி விதிப்பா ?

பரவிய செய்தி

இனி நீங்கள் விற்கப் போகும் பழைய நகைகளுக்கு ஜிஎஸ்டி கட்டியாகவேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3% ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு உங்கள் பழைய நகைகை விற்றால் அதில் ரூ.3000/- ஜிஎஸ்டி என பிடித்தம் செய்யப்படும்.

மதிப்பீடு

விளக்கம்

இனி இந்தியாவில் பழைய தங்கங்களை விற்பனை செய்யும் போது 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்கிற தகவல் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தேவைக்காக பழைய தங்கத்தை விற்பனை செய்யும் வழக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்த தகவலை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இது குறித்து, தேடிய போது கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே இந்த தகவல் வைரலாகி அரசு பதில் அளித்து இருக்கிறது.

Facebook link | archive link 

” நகைக்கடைக்காரர்களிடம் பொதுமக்கள் தங்களின் பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும் போது அந்த நகைக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது. தனிநபர்கள் தொழிமுறை வணிகத்திற்காக பழைய தங்கங்களை விற்பனை செய்வதில்லை. மாறாக, தங்களின் சுயதேவைக்காக மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்கின்றனர். ஆகையால், அதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது ” என 2017-ல் மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Twitter link | archive link 

எனினும், பதிவு செய்யப்படாத தங்க ஆபரண சப்ளையர் பதிவு செய்த சப்ளையருக்கு விற்றால் ஆர்.சி.எஸ் கீழ் வரி பொருந்தும் என முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருந்தார்.  அதாவது, தனிநபர்களிடம் இருந்து பழைய தங்க நகைகளை வாங்கும் தங்க நகைக்கடைக்காரர்கள் ஜி.எஸ்.டி வரியாக 3% செலுத்த வேண்டும் என்பதாகும்.

Links : 

No 3% GST when individuals sell gold jewellery to registered jewellers, says Arun Jaitley

Selling your old gold chain or car won’t attract GST, Arun Jaitley clarifies

Please complete the required fields.




Back to top button
loader