கம்யூனிஸ்ட் கூட்டத்தின் பழைய படத்தையும் சேர்த்து பகிரும் பாஜகவினர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட கூட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும், ஆதரவாளர்கள் தரப்பிலும் பகிரப்பட்டு வருகிறது.
அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களின் தொகுப்புகளில், பதிவுகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் மேற்கு வங்க இடதுசாரிகள் சார்பாக நடைபெற்ற பேரணி கூட்டத்தின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கூட அப்புகைப்படத்தை வெளியிட்டு பின்னர் அந்த ட்வீட் பதிவை நீக்கி உள்ளனர். ஆனால், அந்த ஸ்க்ரீன்ஷார்ட் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் இடது முன்னணி சார்பில் பேரணி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பல கட்சியினரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டம் என பழைய புகைப்படத்தை பகிரும் ஆதரவாளர்கள் !
கொல்கத்தாவில் அரசியல் கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டங்கள் பிரிகேட் மைதானத்தில் நடைபெறுவதால், இணையத்தில் அந்த மைதானம் தொடர்பாக கிடைக்கும் புகைப்படத்தை தெரிந்தும், தவறுதலாகவும் எடுத்து பகிர்ந்து விடுகிறார்கள்.
மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; மம்தாவின் ஸ்கூட்டர் நந்திகிராமத்தில் விழும்
– பிரதமர் திரு.நரேந்திர மோடி வெள்ளமென திரண்ட மக்கள் மத்தியில் பேச்சு@narendramodi#ModirSatheBrigade pic.twitter.com/eVDI1p5lVZ— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 7, 2021
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெருமளவு கூட்டம் கூடி இருந்தாலும் அக்கட்சியினரும் ஆதரவாளர்களும் தவறான புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள் .
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.