ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் ஓங்கி அறை? இல்லை. இது பழைய வீடியோ.

பரவிய செய்தி

வடக்கன்ஸ் பெரிய கோவக்காரங்களா இருப்பாங்க போல இருக்கே. என்ன அறை,…  அநேகமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காது ஜவ்வு கிழிஞ்சு இருக்கும் என்று நினைக்கிறேன்..

X Link

மதிப்பீடு

விளக்கம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுமீதான விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்யும் போது சிகப்பு நிற உடை அணிந்த ஒருவர் அவரை அடித்ததாக வீடியோ ஒன்று  சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 

NDTV’ இணையதளத்தில் இச்சம்பவம் தொடர்பான புகைப்படத்துடன் மே மாதம் 5ம் தேதி 2019 அன்று ’அரவிந்த் கெஜ்ரிவாலை அறைந்த நபர், ஆம் ஆத்மி ஆதரவாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்ததை காண முடிந்தது. 

அதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மோதி (Moti) நகரில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற ரோட் ஷோவின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் நடத்தையில் அதிருப்தி ஏற்பட்டதால் அக்கட்சி ஆதரவாளர் அறைந்ததாக காவல்துறை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேற்கொண்டு தேடியதில், இந்துஸ்தான் டைம் யூடியூப் பக்கத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி 2019 அன்று  வீடியோ பதிவிட்டு இருந்ததைக் காண முடிந்தது.

இவற்றில் இருந்து இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

முடிவு:

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்ததாக சொல்லி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.
Back to top button
loader