ஆஸ்திரேலியாவில் முதலையை விழுங்கும் மலைப்பாம்பின் கோரமான புகைப்படங்கள் !

பரவிய செய்தி
ஆஸ்திரேலியாவின் 2 வது பெரிய மலைப்பாம்பாக கருதப்படும் ‘ஆலிவ் பைத்தான்’ ஒன்று, முதலையை விழுங்கும் கொடூரமான புகைப்படம் வௌியாகி இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் மனிதர்களையே விழுங்கும் அனகோண்டா பாம்புகளை போன்று நீளமான மலைப்பாம்புகளை உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காண முடியும். உலகில் உள்ள மிகப்பெரிய மலைப்பாம்புகளில் ஒன்றாக கருதப்படுவது ஆலிவ் பைத்தான். இவை சுமார் 13 அடி நீளம் கொண்டவை.
ஆஸ்திரேலியாவில் குயீன்ஸ்லாந்தில் உள்ள மவுண்ட் இஷா எனும் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் முல்லர் என்பவர் ஆலிவ் பைத்தான் எனும் மலைப்பாம்பு நீர்நிலையில் இருந்த முதலையை முழுவதுமாக விழுங்கும் காட்சியை புகைப்படங்களாக எடுத்து உள்ளார். இதனை GG Wildlife Rescue Inc எனும் தன்னார்வ அமைப்பு இணையத்தில் பகிர்ந்து இருந்தது.
live science கூற்றின் படி, ” பைத்தான்களுக்கு அவற்றின் உணவின் அளவுகளை அறிந்து இருக்கும், அவை தனியாக கீழ் தாடையை கொண்டிருப்பதால் அவற்றின் வாய் பகுதியை மிகப்பெரிய அளவிற்கு நீட்டிக்க முடிகிறது. மான்கள், முதலை உள்ளிட்ட தன்னை விட மிகப்பெரிய விலங்குகளை தன்னால் உண்ண முடியும் என்பதை அவை அறியும். சில சந்தர்ப்பங்களில் மனிதர்களையும் கூட உண்ணக்கூடியவை “.
ஜூன் 1-ம் தேதி GG Wildlife Rescue Inc பகிர்ந்த ஆலிவ் பைத்தான் முதலையை விழுங்கும் புகைப்படங்கள் உலக அளவில் வைரலாகி வருகிறது. ஆலிவ் பைத்தான் முதலையை விழுங்கும் புகைப்படங்களையும், மற்றொரு மலைப்பாம்பு கருநிற முதலையை விழுங்கும் வீடியோ காட்சியையும் கீழே காணலாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.