கிரிக்கெட்டில் ஒரு பந்தில் 286 ரன்கள் ஓடி எடுத்தனரா ? உண்மை என்ன?

பரவிய செய்தி

1894 ஆம் ஆண்டில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேன் அடித்ததில் பந்து மரத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, பேட்ஸ்மேன் 6 கி.மீ தொலைவிற்கு ஓடி 286 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த செய்தி ஆங்கில செய்தித்தாளான Pall Mall Gazette மூலம் வெளியாகி உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை ஒரு பந்தில் அதிகபட்ச ரன் ஆக சாதனை படைத்தது 17 ரன்கள் மட்டுமே. இதுவே கின்னஸ் சாதனையாகும்.

விளக்கம்

இக்கதை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கதை என்றே கூறலாம். ஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்ததாக மீம்களும், யூடியூப் வீடியோக்கள் என பதிவிட்டால் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி விடுவார்கள். ஆனால், இதற்கு ஆதாரமாக ஆங்கில செய்தித்தாளான Pall Mall Gazette-ஐ குறிப்பிட்டு பதிவிடும் நபர்களும் உண்டு.

Advertisement

ஒரு பந்தில் 286 ரன்கள் ஓடும் அளவிற்கு சாத்தியம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினால், அந்த காலத்தில் 4 மற்றும் 6 இல்லை. ஆகையால், ஓடியே ரன் எடுத்து இருப்பார்கள் என பதில் அளிப்பவர்களையும் அதிகம் பார்க்க முடியும்.

2012 செப்டம்பர் 26-ம் தேதி espncricinfo.com இணையதளத்தில் முன்னாள் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மைகேல் ஜோன்ஸ் எழுதிய கட்டுரையில், ஒரு பந்தில் 286 ரன்கள் செய்தி குறித்து விவரித்து எழுதி இருந்தார்.

1894 ஜனவரி 15-ம் தேதி Pall Mall Gazette செய்தித்தாளில், ” வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேன் அடித்ததில் பந்து அங்கிருந்த உயரமான jarrah எனும் மரத்தில் சிக்கிக் கொண்டது. எதிர் அணி பந்து தொலைந்து விட்டது எனக் கூறியும், அம்பயர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு கோடாரிகள் இல்லை என்பதால் ரைஃபல் துப்பாக்கியை கொண்டு வந்து சுட்டு உள்ளனர். இதற்கிடையில், விக்டோரியன் அணியின் பேட்ஸ்மேன் 6 கி.மீ தொலைவிற்கு ஓடி 286 ரன்கள் எடுத்துள்ளனர் ” என வெளியிட்டு இருந்தனர்.

இந்த கதையை படிக்கும் பொழுதே தெரிந்து இருக்கும் நடந்து இருக்க வாய்ப்பில்லை. மேலும், போட்டி நடந்தது என்னவோ ஆஸ்திரேலியா நாட்டில் என வைத்துக் கொண்டாலும் இங்கிலாந்து பத்திரிகையில் முதலில் வெளியாகி இருக்கிறது. எந்தவொரு ஆஸ்திரேலிய பத்திரிகையிலும் வெளியாகவில்லை. மார்ச் 2-ம் தேதி பெர்த்-ல் உள்ள Inquirer & Commercial News-ல் இந்த செய்தியைக் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், இந்த செய்தியை Pall Mall Gazette-ல் வெளியாகியது என்றே கூறியுள்ளனர்.

மைகேல் ஜோன்ஸ் Pall Mall Gazette-ல் அப்படியொரு செய்தி வெளியிடவில்லை என மறுக்கவில்லை. காரணம், அது கற்பனை கதையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த க்ளப் கிரிக்கெட் போட்டியில் Garry Chapman அதிகபட்சமாக ஒரே பந்தில் 17 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் அடித்த பந்து புல்வெளிக்குள் சிக்கிக் கொண்டதால் எதிர் அணியினர் பந்தை தேடுவதில் தாமதம் ஆகியது.

Advertisement

Garry Chapman ஒரு பந்தில் எடுத்த 17 ரன்கள் மட்டுமே தற்போது வரை உலக சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையானது “ p-247 கின்னஸ் சாதனை 1992-ல் ” இடம்பிடித்து உள்ளது என மைகேல் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்ததாக கூறும் கதைகளை யாரும் உண்மை என நம்ப வேண்டாம். கேட்பதற்கு கற்பனை கதையாக நன்றாக இருக்கும். ஆனால், அதிகபட்ச சாதனையாக இருப்பது ஒரு பந்துக்கு 17 ரன்கள் மட்டுமே !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close