மூலிகை தாவரம் ஊது பாவை என வைரலாகும் விசித்திரமான வீடியோ | உண்மை என்ன ?

பரவிய செய்தி

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும். அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த மூலிகைகள் இயற்கை தந்த பேரதிசயம்!

Twitter link | Archive link   

மதிப்பீடு

விளக்கம்

40 நொடிகள் கொண்ட வீடியோவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் குடுவை மற்றும் புனல் போன்ற ஒன்று இருந்து தூசி போன்ற காற்றை வெளியேற்றுவது அடர்ந்த மழைக்காடுகளில் காணப்படும் மூலிகை தாவரம், இதை தமிழில் ” ஊது பாவை ” என அழைப்பதாகக் கூறி இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Archive link 

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது. இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும். அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரக்கூடிய என தமிழில் பகிரப்பட்ட இவ்வீடியோ இந்திய அளவிலும் பரவி இருக்கிறது. டாக்டர் ராய் ஏ கல்லிவயலில் தன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

தமிழில் ஊது பாவை என அழைக்கப்படும் மூலிகை தாவரம் என வைரல் செய்யப்படும் வீடியோவில் ” Luke Penryexr ” எனும் பெயர் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. அந்த பெயரை வைத்து தேடிப் பார்க்கையில், செப்டம்பர் 16-ம் தேதி லண்டனைச் சேர்ந்த Luke Penry.exr எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by 🍄🇬🇧 (@luke_penry.exr)

Instagram link

இது உண்மையான தாவரம் அல்ல. 3டி/ மோஷன் ஜெனரலிஸ்ட் மற்றும் அப்ஸ்ட்ராக்ட் நேச்சர் ஆர்டிஸ்ட் ஆன லூக் பென்ரி என்பவர் உருவாக்கிய வீடியோ. ” ஜங்கிள் பைப்ஸ் ” எனும் தலைப்பில் இந்த கலைப்படைப்பு வீடியோவை பென்ரி தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

இதேபோன்ற இயற்கை சார்ந்த பல கலைப்படைப்பு வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே லூக் பென்ரி பதிவிட்டு இருக்கிறார். இவற்றை விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

முடிவு : 

நம் தேடலில், அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை எனும் மூலிகை தாவரம் என வைரல் செய்யப்படும் வீடியோ இயற்கையான தாவரம் அல்ல. அது லண்டனைச் சேர்ந்த லூக் பென்ரி என்பவர் கணினி மூலம் உருவாக்கிய கலைப்படைப்பு வீடியோ என்றும், அது இந்தியாவில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button