OPPO நிறுவனம் இந்திய ஊழியர்களை அவமதித்ததா ?

பரவிய செய்தி
OPPO செல்போன் நிறுவனம் இந்தியர்களை பிச்சைகாரர்கள் என்று கூறியதால் அந்நிறுவனத்தின் பஞ்சாப் சேவை குழு தங்கள் பதவியை விட்டு விலகுவதாக அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது .
மதிப்பீடு
சுருக்கம்
ஊழியர்கள் ஒன்று கூறுகிறார்கள் , நிறுவனம் ஒன்று கூறுகிறது . இப்படி இருந்தால் எது உண்மை என்று தீர்மானிப்பது ……
விளக்கம்
சீன செல்போன் தயாரிப்புகளில் ஒன்று தான் OPPO நிறுவனம் . இந்திய செல்போன் வணிகத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது . இப்படி வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது ஒரு புகார் எழுந்துள்ளது . அதாவது அந்நிறுவனத்தில் ஊழியர்களில் இந்தியர்களும் ஒருவர் . அவர்களை பிச்சைகாரர்கள் என்று கூறியதாக கூறி ஒரு செய்தி இணையத்தில் காணப்படுகின்றது .
தவறான நடவடிக்கை காரணமாக பஞ்சாப் சேவை குழு மேலாளர் அருண் ஷர்மா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் . அங்கு வேறொரு மேலாளர் இந்தியர்களையும் அவர்களின் கலாசாரத்தையும் அவமதிக்கின்றார் , எங்களுக்கு எந்தவித மரியாதையும் தருவதில்லை , தேவை இல்லாமல் தண்டனைகள் வழங்குகின்றார் , தங்களுக்கு பணி சுமை அதிகம் ஏற்படுத்துகின்றார் , சம்பள உயர்வு கேட்கும் போது இந்தியர்கள் பணத்தின் மீது மட்டுமே குறியாக உள்ளனர் என்றெல்லாம் கூறுகிறார் இப்படிக்கு பஞ்சாப் சேவை குழு என்று அக்கடிதத்தில் இருந்தது .
இதை மேலாளர் அருண் ஷர்மா மறுத்துள்ளார் . இந்த செயலை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை , ஆனால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் மேலாளர் அருண் ஷர்மா பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளார் . ஆனால் அதில் உள்ள கையெழுத்துகள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை . இவை பற்றி பேச தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார் .
மேலும் OPPO நிறுவனம் இவ்வித தவறான அறிக்கைகள் இனிமேல் வராமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று பதிவிட்டுள்ளன . ஒன்றன்பின் ஒன்று முரணாகவே இருக்கிறது . மார்ச் 2017 இல் ஒப்போ நிறுவன ஆலையில் ஊழியர் ஒருவர் இந்திய கொடியை அவமதித்ததாக கூறி நீக்கப்பட்டது குறுப்பிடப்பட வேண்டியது .