தேனியில் பதிவான 3 லட்சம் வாக்குகள் காணாமல் போனதா ?

பரவிய செய்தி

தேனியில் பதிவான 11 லட்சம் வாக்குகளில் 3 லட்சம் வாக்குகள் காணாமல் போய் உள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

தேனியில் துணை முதல்வர் மகன் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தி தான் குழப்பத்திற்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

அதில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை தவறாக உள்ளது. மொத்த ஓட்டுக்களையும் அதிலுள்ள ஒவ்வொரு வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களையும், என்னும் போது வரும் ஓட்டு எண்ணிக்கை சில லட்சம் தவறாக உள்ளது.அது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் ,அது அந்த பத்திரிக்கையின் தவறு. தேர்தல் ஆணைய தளத்தில் மிகத் தெளிவாக நேற்றிலிருந்து அவர் வாங்கிய வாக்கு, பிறர் வாங்கிய வாக்கு, மொத்த வாக்கு சரியாகத்தான் இருந்தது.

உண்மையில் ரவீந்திரநாத் ஐந்து லட்சத்திற்கு மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சம் வாக்குகளைப் பெற்று உள்ளனர். ஆனால் இது தெரியாமல் தவறாக வந்த பத்திரிக்கை செய்தியை வைத்துக்கொண்டு அதை ஒருவர் கணக்கெல்லாம் போட்டு முகநூலில் பரப்பி வருகிறார்கள்.

உண்மையில், இதில் ஏதோ முறைகேடு நடந்து விட்டது என்பது போன்ற பேச்சுகளில் அர்த்தமில்லை இது வெறும் வதந்தியே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button