ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் என அண்ணாமலை கூறினாரா ?

பரவிய செய்தி

எடப்பாடியாரின் தலைமைதான் நல்லது. எடப்பாடியார் தலைமைதான் அதிமுகவிற்கு நல்லது. ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் . அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து.

மதிப்பீடு

விளக்கம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒன்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் என தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கூறிய கருத்துக் குறித்து தேடுகையில் , ” அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது; தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ” என்ற செய்தியையே தந்தி டிவி வெளியிட்டு இருக்கிறது.

Facebook link 

ஜூன் 16-ம் தேதி ” அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது ” என அண்ணாமலைக் கூறிய கருத்து பற்றிய வெளியான நியூஸ் கார்டில் போலியானச் செய்தியை எடிட் செய்துள்ளனர்.

அண்ணாமலைப் பற்றி பரப்பப்படும் செய்திக் குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு கேட்கையில் , ” இது போலியான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில்,  எடப்பாடியார் தலைமைதான் அதிமுகவிற்கு நல்லது. ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது

Please complete the required fields.
Back to top button