ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழிலே திருடுவது என இபிஎஸ் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் மாயம். புரட்சித் தலைவர் அவர்கள் அம்மாவிற்கு வழங்கிய செங்கோல் உள்ளிட்ட முக்கிய பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களைத் திருடிக் கொண்டு சென்றிருக்கிறது திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட அந்த கூட்டம் – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மதிப்பீடு
விளக்கம்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் இருந்து பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றதாகவும், அவரின் சமூகத்திற்கு திருடுவதே குலத்தொழில் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
தேவர்,கள்ளர்,அகமுடையார் என்பதுதானே
முக்கலத்தோர்
முக்குலத்தோரை கவுண்டர் கேவலப்படுத்துகிறாரா ?குலத்தொழில் என்ற சொல் தேவைதானா ? pic.twitter.com/CwVmdQC4LS
— ஆதிரன் ❤️ (@Aathiraj8586) July 21, 2022
— திருட்டுகுமரன் (@ThirutuKumaran) July 21, 2022
உண்மை என்ன ?
ஒன்றைத் தலைமையால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே உருவாகிய மோதலால், பொதுக்குழு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்தருணத்தில், அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள் பலவற்றை எடுத்துச் சென்ற செய்திகள் வெளியாகின.
அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட போது, ” அலுவலகத்தில் இருந்த ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளி வேல் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் காணவில்லை ” என சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார்.
