வடிவமைப்பு நகர்வது மனநிலைப் பாதிப்பிற்கான அறிகுறியா ?

பரவிய செய்தி

கீழே உள்ள படம் தொடர்ச்சியாக நகர்ந்தால் அதிக மன அழுத்தத்தில் இருக்குறீர்கள் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று அர்த்தம்.

மதிப்பீடு

சுருக்கம்

புகைப்படங்களில் இருக்கும் வடிமைப்பு நகர்வது போன்று தெரிவதற்கு காரணம் ஒளியியல் மாயை மட்டுமே. அவை நகர்வது இல்லை, நிலையான படங்களாகும்.

விளக்கம்

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட வலைத்தளங்களில் ஓர் புகைப்படத்தில் இருக்கும் வடிவமைப்பை பார்க்கும் பொழுது நகர்வது போன்று தெரியும். இதனை அதிகம் பகிர்ந்து சோதனை செய்து பார்க்க சொல்வதுண்டு.

Advertisement

அதேபோன்ற வடிவமைப்பை பகிர்ந்து அதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டு உள்ளனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நரம்பியல் துறை பேராசிரியர் yamamoto இதனை உருவாக்கியதாகவும், இதற்கு சில அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளதாக இடம் பெறுகிறது. அவை,

  • அந்த வடிவமைப்பு நகராமல் அல்லது சிறிதாக நகர்ந்தால் நீங்கள் ஆரோக்கியத்துடன் மற்றும் நல்ல தூக்கத்துடன் உள்ளீர்கள்.
  • மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தால் மன அழுத்தம் மற்றும் சோர்வில் உள்ளீர்கள்.
  • வேகமாக நகர்ந்தால் அதிக மன அழுத்தம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன என்று ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கிறது.

எப்படி நகர்கிறது :

இவ்வாறு பகிரப்படும் நகரும் படங்கள் GIF அல்லது அனிமேஷன் இல்லை. அவை 100 சதவீதம் நிலையான அமைப்பே. நிலையான வடிவமைப்பு நகர்வது போன்று தெரிவதற்கு காரணம் ஒளியியல் மாயையே. இந்த ஒளியியல் மாயை கண்ணில் எவ்வாறு நிகழ்கிறது என்று இத்தாலி நாட்டின் நரம்பியல் பேராசிரியர் alice proverbio தெரிவித்து உள்ளார்.

இது போன்ற படங்கள் மன அழுத்தத்தை கண்டறியும் சோதனை என்றுக் கூறுவது முழுவதிலும் தவறான தகவல். குறிப்பிட்ட நேரம் இதையே பார்த்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு நிச்சயம் தலைவலி உண்டாக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய சில படங்கள் :

Advertisement

ஓர் படத்தை பகிர்ந்து அதில் இருக்கும் புள்ளியை கூர்மையாக கவனித்த பிறகு சுவரில் பாருங்கள் அந்த உருவம் தெரியும் என்று சொல்வதை அதிகம் கேட்டு இருப்போம். ஒளியியல் மாயையால் உண்டாகும் இது போன்ற விளையாட்டுகளைத் தீவிரமாக உண்மை என நினைக்க வேண்டாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button