This article is from Jul 11, 2018

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவ 24×7 help line எண்..!

பரவிய செய்தி

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12×7 help line- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி எண் 1800113090 மற்றும் 00911140503090. உடனடியாக நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.

மதிப்பீடு

விளக்கம்

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் சுரண்டப்படுவது, புறக்கணிப்பது, மோசடி செய்வது, தவறாக நடத்தப்படுவது என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய இந்திய அரசு டோல் ப்ரீ எண்ணை அறிமுகப்படுத்தியது. 2007-ம் ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்ட இந்த சேவை 2008-ம் ஆண்டின் ஜனவரியில் தொடங்கப்பட்டது.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் “ pravasi Bharatiya Divas “ என்ற நாளில் வெளிநாட்டில் பணிப்புரியும் இந்தியர்களுக்கு Overseas Workers Resource Centre-ன் help line எண் 1800113090  தொடங்கப்பட்டது. இதை அன்றைய பிரதமர் Dr. மன்மோகன்சிங் துவங்கி வைத்தார்.

இந்த OWRC help line குடியேற்றம் பற்றிய தகவல்களை வழங்குவது, குடியேற்றம் பற்றிய விசயங்களை பரப்புவது போன்றவற்றையும், புகார்களை பதிவு செய்யவும், கண்காணிப்பு செய்யவும் பயன்படுகிறது. இந்த help line எண் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல் உலகின் எந்த நாட்டிலும் உள்ள சிறந்த வேலைக்கான வாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

OWRC help line சேவை 12×7 மணி நேரம் செயல்படும் என்று சமூக வலைத்தளத்தில் கூறப்படுகிறது. ஆனால், இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகம் வெளிநாட்டு இந்தியர்களுக்கு உதவ 24×7 மணி நேரமும் help line எண் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அவசர உதவி எண்கள் தவறான வெளிநாட்டவர்களை திருமணம் செய்து பாதிக்கப்பட்டவர்களும் உடனடியாக இந்த எண்ணை தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

” 24  மணி நேரமும் செயல்படும் help line-ல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய 7 மொழிகளில் உதவியை பெற முடியும் “.

வறுமையின் காரணமாக வெளிநாட்டிற்கு சென்று கட்டிடத் தொழில், வணிக நிறுவனங்கள் என பல கடுமையான தொழில்களில் பணிப்புரிந்து வரும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை 1800113090 மற்றும் 911140503090 என்ற டோல் ப்ரீ எண்களுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இந்த சேவை பற்றி அறியாத பலர் வேலைப் பார்க்கும் நாடுகளில் தங்களுக்கு ஏற்படும் ஒடுக்குமுறை மற்றும் மோசடி உள்ளிட்ட பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை சமீபக் காலமாக அதிகம் பார்க்க முடிகிறது. ஆக, இந்த தகவலை அதிகம் பகிர்ந்தோ அல்லது உங்கள் நண்பர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவிப்பது சிறந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader