ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் ஓவைசி இருப்பதாக பரவும் போலியானப் படம் !

பரவிய செய்தி
இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று மோகன் பகவத் பக்கத்தில் அமர்ந்திருப்பது சாட்சாத் உவைசி தான் இன்னும் இவரை முஸ்லிம்கள் நம்புவார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப்பிரதேசத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி முஸ்லீம் வாக்குகளை பிரித்து பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடன் ஓவைசி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக இப்புகைப்படம் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது
உண்மை என்ன ?
மோகன் பகவத் உடன் ஓவைசி இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத்தை உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் பகிர்ந்ததாக ” 2021 டிசம்பர் 21-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஓவைசியின் புகைப்படம் குறித்து தேடுகையில் ,”2017-ல் இங்கிலாந்து நாட்டின் தூதரக அதிகாரியை சந்தித்த போது ” எடுக்கப்பட்ட படத்தில் இருந்து எடுத்துள்ளனர். அந்த படத்தை ஓவைசியின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
2017-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒவைசி படத்தை, கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் படத்துடன் எடிட் செய்து தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் ஓவைசி இருப்பதாக பரப்பப்படும் புகைப்படம் போலியானது. இருவரின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.