Oxford dictionary-ல் இந்தியா என்பதன் பொருள் இதுவா ?

பரவிய செய்தி
ஆங்கில மொழியில் பல்வேறு நாடுகளின் பெயர்கள் சரியாக உச்சரிக்கபடுகின்றன . ஆனால் நம் பாரதம் மட்டும் ஏன் இந்தியா என்று அழைக்கப்படுகின்றது. oxford dictionary இல் இந்தியா என்பதன் பொருள் independent nation declared in august ஆகும் . இது பலரும் அறியாத உண்மையாகும்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். இங்கு பல்வேறு மொழிகள் இருக்கின்றன. முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வரும் போது சிந்து நதியைக் கடந்து வந்தனர். அப்போதைய பாரதத்தில் பல்வேறு விதமான கலாச்சாரத்தை கொண்ட மக்கள் பல ராஜ்ஜியங்களாக வாழ்வதை கவனித்துள்ளனர். அவ்வாறு பாரதத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களையும் ஒரே பெயரில் அழைக்க எண்ணினர்.
சிந்து நதியை கடந்து வந்ததால் அப்பகுதியில் வாழ்ந்த மக்களை சிந்து மக்கள் என்று அழைத்துள்ளனர். சிந்து, சிந்தி என்பது சரியாக உச்சரிக்கப்பாமல் ஹிந்தி, ஹிந்து என்ற பெயராக மாறியது. காலப்போக்கில் பாரதத்ததை ஹிந்துஸ்தான் என்று அழைத்தனர்.
ஆங்கிலேயர்கள் கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரிலே வணிகம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். அதன் பிறகு அவர்களின் ஆட்சிகாலத்தில் இந்தியா என்று அனைவராலும் சுருக்கமாக அழைக்கப்பட்டது காலப்போக்கில் பாரதம் என்ற பெயர் மறைந்தது .
இதில் 99% இந்தியர்களுக்கு இந்தியாவின் பொருள் தெரியாது என்றார்கள் , அது தவறான கருத்தாகும். இவர்களை போன்ற 1% நபர்கள் தான் தவறான கருத்துக்களை பரப்புகின்றன . இதுவே பாரதம் இந்தியா என்று அழைக்கப்பட காரணம் ஆகும். இதையறியாமல் வதந்திகளை பரப்பியுள்ளனர்.
இந்தியாவிற்கு ” independent nation declared in august ” என்று பொருள் கூறுவது தவறான தகவல் என அறிந்து கொள்ளுங்கள்.