நோயாளியை சித்தரவதை செய்து கொலை செய்ததாக பரவும் தவறான வீடியோக்கள் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

மேலே இணைக்கப்பட்ட வீடியோவில் பேசும் பெண், ” எனது தந்தையை இங்கு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அவருக்கு சரியான சிகிச்சை மற்றும் மாத்திரை அளிக்காமல் அவரை கொன்று விட்டனர் ” எனக் கூறுவதை தொடர்ந்து ஒருவர் படுக்கையில் இருக்கும் நோயாளியை கழுத்தை நெரிப்பது போன்றும், இன்னொரு பகுதியில் மருத்துவர்கள் நோயாளியை அடிப்பது போன்றும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மை தன்மையை காண்போம்.

Advertisement

உண்மை என்ன ?

இதில் உள்ள விடியோ 3 தனித்தனி காட்சியாக வெவ்வேறு இடங்களில் எடுத்ததை போல உள்ளது என்ற சந்தேகத்தின் கோணத்தில் அவற்றை தனித்தனியாக எடுத்தது ரிவெர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அவை மூன்றும் வெவ்வேறு வீடியோ காட்சி என உறுதி செய்யப்பட்டது. அவை எங்கு எப்பொழுது நடந்தது என்பதை காணலாம்.

  1. முதல் வீடியோ  – பெங்களூருவின் ஆக்ஸ்போர்ட் மருத்துவமனை :

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பெங்களூருவின் ஆக்ஸ்போர்ட் மருத்துவமனையில் அகிலா என்பவர் தனது தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான மருத்துவம் செய்யாமல் கொன்றுவிட்டது, அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் எதையும் கொடுக்காமல் அப்டியே விட்டுவிட்டனர். அதனால் தான் அவர் இறந்துவிட்டார் என்று குற்றம்சாட்டி உள்ளதை வீடியோவில் காணலாம்.

2. இரண்டாம் வீடியோ – பாட்டியாலா நகர தனியார் மருத்துவமனை :

Advertisement

பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை எடுக்கும் ஒரு நபரை அங்கு உள்ள நிர்வாகிகள் கடுமையாக அடிக்கும் இந்த சம்பவம் ஆகஸ்ட் 22, 2020ம் ஆண்டு நடந்துள்ளது. பின்னர் இச்சமபவத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

3. மூன்றாம் வீடியோ – பங்களாதேஷ் :

முதியவர் ஒருவரை படுக்கையில் கழுத்தை நெரித்துக் கொல்வதுபோன்று காட்டப்பட்டு இருக்கும் காட்சியானது, முதியவர் ஒருவருக்கு கட்டாயமாக மருந்து வழங்கும் காட்சி என பங்களாதேஷ் நாட்டில் வைரலான வீடியோ என மே 20, 2020ம் தேதியே ALT News தளம் கட்டுரை வெளியிட்டு இருந்தனர்.

முடிவு :

நம் தேடலில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பெங்களூருவின் ஆக்ஸ்போர்ட் மருத்துவமனையில் அகிலா என்பவர் தனது தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான மருத்துவம் செய்யாமல் கொன்றுவிட்டது என பேசும் வீடியோ உடன் கடந்த வருடம் பாட்டியாலா மற்றும் பங்களாதேஷில் நடந்த வேறு சில சம்பங்களை இணைத்து தவறான வீடியோவாக சிலர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button