உலக சினிமா பற்றி ஆக்ஸ்ஃபோர்ட் வெளியிட்ட புத்தகத்தில் எம்.ஜி.ஆர் பெயர் மட்டும் உள்ளதா ?

பரவிய செய்தி

“இறந்தும் பெயர் சொல்ல வேண்டும்” உலக சினிமாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்க திரைத்துறையில் சாதித்த 140 நபர்களின் வரலாற்றைப் பதிவு செய்து ‘உலக சினிமா சரித்திரம் (The Oxford history of world cinema) என்ற புத்தகத்தை வெளியிட்டது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்; இதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி. ஆர்!

மதிப்பீடு

விளக்கம்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உலக சினிமாவின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் ‘உலக சினிமா சரித்திரம்’ (The Oxford history of world cinema) என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது. அதில் 140 நபர்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு நடிகர் மட்டுமே இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ளதாகவும், அது எம்.ஜி.ஆர் என்றும் ஒன் இந்தியா தமிழ் நியூஸ் கார்ட் ஒன்றினை கடந்த 12ம் தேதி பதிவிட்டுள்ளது.

Advertisement

உண்மை என்ன ?

ஒன் இந்தியா தமிழ் தனது நியூஸ் கார்டில் குறிப்பிட்டு இருக்கும் தகவல் குறித்து  The Oxford history of world cinema என்ற புத்தகத்தில் தேடினோம்.1996ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அப்புத்தகம், மொத்தம் 824 பக்கங்களைக் கொண்டுள்ளது. 

அதில், ஊமைப்படம் இருந்த கால காலக்கட்டத்தை  Silent Cinema 1895-1930 என்ற தலைப்பிலும், பேசும் படம் இருந்த காலகட்டத்தை Sound cinema 1930 – 1960 என்றும், அதற்கு பிறகான சினிமாவினை The modern cinema 1960 – 1995 என்ற தலைப்பிலும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எழுதிய கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளது.  

அத்தொகுப்பில் இந்திய சினிமா குறித்து ஆஷிஷ் ராஜதயசா என்பவர் எழுதியுள்ளார். அதில், இந்திய நடிகை நர்கீஸ், நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், இயக்குநர் சத்ய ஜித்ரே ஆகியோரை பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

நடிகை நர்கீஸ் இந்திய சினிமாவில் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமாவில் இருந்து எப்படி அரசியலுக்கு சென்றார். இந்திய சினிமாவில் சத்ய ஜித்ரேவின் படைப்புகள் எத்தகையில் மாறுபட்டு இருந்தது என்பதை பற்றி அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்புத்தகத்தில் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன், ராஜ் கபூர் போன்றோரின் பெயர்களும், எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில்  தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி போன்றோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

நடிகர் என்ற முறையில் எம்.ஜி.ஆர், நடிகை என்ற முறையில் ஒருவரையும் மற்றும் இயக்குநர் என்கிற முறையில் ஒருவரையும் கட்டுரையாளர் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்த கட்டுரையில் இந்திய சினிமாவில் அந்தந்த காலகட்டத்தில் வெளியான முக்கிய திரைப்படங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உலக சினிமா குறித்து வெளியிட்ட கட்டுரை தொகுப்பு புத்தகத்தில் நடிகர் என்ற முறையில் எம்.ஜி.ஆர் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதே போல, நடிகை நர்கீஸ், இயக்குநர் சத்ய ஜித்ரே ஆகியோரை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அப்புத்தகத்தில் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன், ராஜ் கபூர் போன்றோரின் பெயர்களும் உள்ளன என்பதை அறிய முடிகிறது. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button