This article is from Apr 30, 2020

ஓசோன் படலத்தின் ஓட்டையை மூடியது கொரோனாவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

உலகிற்கு இப்படியொரு நல்ல செய்தி – பிரம்மாண்ட ஓசோன் ஓட்டையை மூடிய கொரோனா!

News link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காமல் இருப்பதால் காற்று மாசுபாடு பெரிய அளவில் குறைந்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஓசோன் படலத்தில் இருந்த மிகப் பெரிய துளை தானாக மூடிக் கொண்டதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒருபக்கம் மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கையில், மறுபுறம் காற்று, நீர் மாசுபாடு குறைந்து இருப்பதாகவும், ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக அடைத்துக் கொண்டதாக செய்திகள், மீம்ஸ்கள் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

ஏப்ரல் 23-ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பூமி கண்காணிப்பு திட்டமான கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (CAMS) ஆர்க்டிக்  மீது ஓசோன் அடுக்கில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய துளை மூடப்பட்டு உள்ளதாக அறிவித்தது. மார்ச் மாதத்தில் ஆர்க்டிக் பகுதி மீது உருவான ஒரு மில்லியன் சதுர கி.மீ அகல ஓசோன் படல துளையை CAMS தீவிரமாக பின்தொடர்ந்து வந்துள்ளது.

Twitter link | archive link

இந்த தகவலை அடுத்து பலரும் CAMS-ஐ டாக் செய்து கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே செல்லாத காரணத்தினால் இப்படி நிகழ்ந்ததா என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு CAMS மறுப்பு தெரிவித்ததோடு விளக்கமும் அளித்து இருந்தது.

Twitter link | archive link 

” இந்த ஆர்க்டிக் ஓசோன் துளை உண்மையில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு நிலை உடன் எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக , வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்ட கால துருவ சுழல் (polar vortex) காரணமாக ஏற்பட்டது ” என CAMS ட்வீட் செய்து இருந்தது.

ஆர்க்டிக் பகுதியில் இருந்த ஓசோன் படலத்தின் மிகப்பெரிய துளை தானாக மூடிக் கொண்டதற்கு கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்களின் செயல்பாடுகள் குறைந்ததே காரணம் என வெளியான தகவல் தவறானது.

Please complete the required fields.




Back to top button
loader