பாகிஸ்தானில் மோடிக்கு ஆதரவாக பாஜக கொடியுடன் ஊர்வலமா ?

பரவிய செய்தி
பாகிஸ்தானில் பாஜக கொடி. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பும் மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் பெற்றுவார் என நம்பும் மக்கள் கையில் பாஜக கொடியுடன் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு ஆதரவாக கோசமிட்டு ஊர்வலமாக செல்வதாக 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேக்கிங் நியூஸ்: பாகிஸ்தானில் பாஜக கொடி…….
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி ஆட்சிக்கு வந்து சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பும் மக்களின் கொண்டாட்டம்…..
அகண்ட பாரதம் அமைத்தே தீருவோம் 🇮🇳🇮🇳🇮🇳@AmitShah @Swamy39 @KalyaanBjp pic.twitter.com/HVjFlSp6mt— Ajmal Raja (@ajmalkhan2509) May 7, 2022
உண்மை என்ன ?
பலுசிஸ்தான் பகுதியில் பாஜக கொடியுடன் ஊர்வலம் செல்வதாக பரவும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2019 மார்ச் 30-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பாஜக துணைத் தலைவர் சோபி யூசப் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது எனக் கூறி இவ்வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் “.
While going to file nomination papers.#PhirEkBaarModiSarkar #LokSabhaElection2019 #NamoNamo @narendramodi @AmitShah @rammadhavbjp @Ramlal @ImAvinashKhanna @AshokKoul59 @RavinderBJPJK @BJP4JnK @BJP4India pic.twitter.com/l1cUMiUzIZ
— Sofi Yousuf🇮🇳 (@imSofiYousuf) March 30, 2019
அதற்கு அடுத்தநாள் ஜம்மு & காஷ்மீரின் பாஜக ட்விட்டர் பக்கத்தில், ” அனந்தநாக் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சோபி யூசுப் தனது ஆதரவாளர்கள் உடன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது மோடி மோடி என கோசமிட்டு சென்றதாக ” அதன் தொடர்ச்சியான காட்சிகளைக் கொண்ட வீடியோவை பதிவிட்டு இருக்கிறது.
#PhirEkBaarModiSarkar
Modi Modi in Anantnag,Amid sloganeering BJP’s Anantnag Parliamentary Constituency candidate Sh. Sofi Yousuf accompanied by thousand of supporters including women folk files nomination paper in Anantnag.@SharmaKhemchand pic.twitter.com/AK6XsvCNDa
— BJP Jammu & Kashmir (@BJP4JnK) March 31, 2019
மேலும் படிக்க : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் “மோடி மோடி” எனும் முழக்கம் எழுப்பப்பட்டதா ?
இதற்கு முன்பாக, பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என முழங்கியதாகவும் தவறான வீடியோக்களை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், 2019-ல் இந்தியாவிற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் எடுக்கபட்டது என தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.