பாகிஸ்தானின் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடி ஒளிபரப்பு !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த டவ்ன் சேனலை ஹக் செய்து இந்தியாவின் மூவர்ணக் கொடி உடன் ” இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ” என்கிற வார்த்தையும் ஒளிபரப்பச் செய்த வீடியோ ஒன்று இந்திய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் செய்தி ஊடகமான டவ்ன் நியூஸ் சேனலில் விளம்பரம் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கையில் இடையே இந்திய தேசியக் கொடி அசைய கீழே சுதந்திர தின வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மாலை 3.30 மணி அளவில் சிறிது நேரம் தோன்றி மறைந்து உள்ளது.
இது குறித்து டவ்ன் நியூஸ் சேனல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ” இந்த சம்பவத்தில் உடனடி விசாரணைக்கு ஆணையிட்டு உள்ளதாக டவ்ன் நிர்வாகம் ” தன் ட்விட்டர் பக்கத்தில் உருது மொழியில் பதிவிட்டு உள்ளது. விசாரணைக்கு பிறகு பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
ڈان انتظامیہ نے معاملے کی فوری طور پر تحقیقات کا حکم دے دیا
Read more: https://t.co/LUXoMdG3EM #DawnNews pic.twitter.com/4hImbV70oZ— DawnNews (@Dawn_News) August 2, 2020
இந்திய ஹக்கேர்கள் பாகிஸ்தான் நாட்டின் டவ்ன் நியூஸ் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடியை ஒளிபரப்பியதாக இந்திய ட்விட்டர் வாசிகள் பதிவிடத் துவங்கினர். தற்போது அது இந்திய சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.