பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா..? என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர்அசாம். பின்னர் தன் சகோதரியை திருமணம் செய்து கொண்டார்..

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான பாபர் அசாம் தனது உடன் பிறந்த சகோதரியையே திருமணம் செய்து உள்ளார் எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அவர் ஒரு பெண்ணுடன் செல்ஃபி எடுத்துள்ளதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அவருடைய சகோதரி அல்ல என்பதையும், சர்வதேச நடுவர் (Umpire) அலீம் தாரின் மருமகளான ஜாரா நயீம் தார் என்பதையும் அறிய முடிகிறது. மேலும் பாபர் அசாமுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை, ஜாரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 3௦ அன்று பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Zara Naeem Dar (@zaraa.dar)

மேலும் ஆய்வு செய்ததில், பாபர் ஆசாமின் PR நிர்வாக நிறுவனமான Saya Corporation அவரது திருமணம் குறித்த செய்தி போலியானது என தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Twitter link

அப்பதிவை கிரிக்கெட் பதிவை பாபர் அசாமும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பரவி வரும் இந்த தகவல்களை பாபர் அசாமின் குடும்பம் மறுத்துள்ளது தொடர்பாக CricketPakistan என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.

மேலும் படிக்க : ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

முடிவு:

நம் தேடலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை மணந்ததாகப் பரவும் தகவல் தவறானது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அவருடைய சகோதரி அல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader