பாகிஸ்தானில் கள்ள நோட்டு அச்சடிக்கும் பகுதியா?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
பாகிஸ்தானில் குடிசை தொழில்.. pls இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இல்லையெனில் இந்த வீடியோவை ரகசியமாக எடுத்த நபருக்கு இந்த பணி வெற்றிகரமாக இருக்காது.
மதிப்பீடு
விளக்கம்
வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானில் நாட்டில் குடிசை தொழிலாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாகவும், அவரின் முயற்சிக்காக இந்த வீடியோவை அதிகம் பகிருமாறு கீழ்காணும் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாகிஸ்தான் நாட்டில் இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடிப்பதாக பகிரப்படும் வீடியோ உண்மையானது அல்ல. இது போலியானவை என்பதற்கு அந்த வீடியோவிலேயே ஆதாரங்கள் உள்ளன.
வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் ரூபாய் நோட்டு கட்டுகளில் வரிசை எண் இல்லை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என இல்லை, ஆர்பிஐ சின்னம் இல்லை, கவர்னரின் கையொப்பமில்லை, இந்தியா ரூபாயின் குறியீடு கூட இல்லை.
இத்தகைய ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காகவோ அல்லது சினிமாவில் பயன்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்ட போலியான நோட்டுகள் என அறிந்து கொள்ள முடிகிறது. ஆக, வைரலாகும் வீடியோவில் இருப்பது இந்திய கள்ள நோட்டுகளும் அல்ல, அதை அச்சடிப்பது பாகிஸ்தானும் அல்ல என்பதை தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்க : வீடியோவில் இருப்பது பங்களாதேஷில் இயங்கும் கள்ளநோட்டு தொழிற்சாலையா?
இதேபோல், கடந்த 2018-ல் பங்களாதேஷ் நாட்டில் அச்சடிக்கும் தொழிற்சாலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடிக்கும் அதிர்ச்சி வீடியோ என இதே வீடியோவை வைரல் செய்து இருந்தனர். அப்பொழுதே, வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை யூடர்ன் வெளியிட்டு இருந்தோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.