This article is from Aug 09, 2019

காஷ்மீர் பெண் என GoT கதாபாத்திரத்தை பதிவிட்ட பாகிஸ்தான் நையாண்டி பக்கம் !

பரவிய செய்தி

பெல்ட் குண்டுகளால் பார்வையை இழந்த காஷ்மீர் பெண். அவரின் சகோதரன், தந்தை, தாய் ஆகியோர் இரக்கமற்று கொல்லப்பட்டனர். அவரின் சகோதரி இந்திய ராணுவத்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தற்பொழுது ஸ்ரீநகர் தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.

மனித நேயம் எங்கே ?

மதிப்பீடு

விளக்கம்


காஷ்மீர் விவகாரத்தில் தவறான தகவல்களும், படங்களும் இணையத்தில் பகிரப்படுவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, நையாண்டி எனும் பெயரில் எல்லை மீறிய இழிவான செயல்களையும் சிலர் செய்கின்றனர்.


பாகிஸ்தானை சேர்ந்த Zaidu என்ற ட்விட்டர் பக்கத்தில், ” கேம்ஸ் ஆஃப் ட்ரோன்ஸ் ” சீரிஸில் இடம்பெறும் கதாபாத்திரமான Arys stark என்பவரின் புகைப்படத்தை பதிவிட்டு , இந்திய ராணுவத்தால் கண்களை இழந்து ஸ்ரீநகர் தெருக்களில் பிச்சை எடுக்கும் காஷ்மீர் பெண் என ஆகஸ்ட் 3-ம் தேதி பதிவிடப்பட்டது.

ஏன் இவ்வாறான பதிவை பதிவிட வேண்டும் என தெரிந்து கொள்ள முயற்சித்த பொழுது Zaidupk என்ற ட்விட்டர் கணக்கில் ” அனைத்து ட்விட்களும் கேளிக்கையானவை, 100% போலியான புகைப்படங்களே ” என வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Zaidu என்ற ட்விட்டர் பக்கம் பகிர்ந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகவும் தொடங்கியது. டெல்லியைச் சேர்ந்த பேராசிரியரான Madhu purnima kishwar என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிவிக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பதிவையும், அந்த படத்தை குறித்து இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் Zaidu தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எள்ளி நகையாடியுள்ளது. சில ஆபாச வார்த்தைகளை பகிர்ந்து விமர்சித்தும் உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த Zaidu ட்விட்டர் பக்கம் கேளிக்கை என்ற பெயரில் வரம்பு மீறிய படங்கள், பதிவுகளை வெளியிடுகிறது.


தற்பொழுது ஆகஸ்ட் 7-ம் தேதி காஷ்மீரில் ஏழை குழந்தைகள் உடைகள் இல்லாமல் எத்தனை துயரத்தில் இருக்கின்றனர் என மற்றொரு பதிவில் ஒரு தவறான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவை விமர்சிப்பதாக நினைத்து காஷ்மீர் மக்களை கொச்சைப்படுகின்றனர். நையாண்டி பதிவுகளின் பெயரில் மனிதமற்ற செயலை செய்பவர்கள் கண்டிக்கத்தக்க கயவர்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader