மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
மத்திய பிரதேசத்தின் தாஹியில் ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்பான நிகழ்வில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். காவல்துறையினர் அவ்வாறு கோஷமிடுவதை தடுத்தனர். அப்போது காவல்துறைக்கு எதிராக கொடூரமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அவருடைய கூட்டத்தைப் பாருங்கள்.. இந்துகளே இந்துமதம் மக்கள் மற்றும் இந்து கோவில் காக்க ஒரே கட்சி பாஜக தான்…
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்பான நிகழ்வு ஒன்றில் காவல்துறையினருக்கு எதிராக “பாகிஸ்தான் ஜிந்தாபாத்“ என்று கோஷமிட்டதாகக் கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
A Congress MLA calls Pakistan Zindabad in Rahul Gandhi’s yatra related event in Talhi, Madhya Pradesh. Cops stop it. See the rude behaviour of the Congress MLA and the crowd with police…. pic.twitter.com/G3WqiLT1kH
— Rknaidu (@Rknaidu40052938) June 18, 2023
மேலும் அப்பதிவுகளில், “இந்துகளே, இந்துமதம், இந்து மக்கள் மற்றும் இந்து கோவில்களை காக்கும் ஒரே கட்சி பாஜக தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-இல் இருந்தே பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
A Congress MLA calls Pakistan Zindabad in Rahul Gandhi’s yatra related event in Talhi, Madhya Pradesh. Cops stop it. See the rude behaviour of the Congress MLA and the crowd with police…. pic.twitter.com/mNeXzuUGYB
— Arumugam Mudaliyar (@ArumugamMudali1) November 29, 2022
2022 நவம்பர் 26 அன்று TV9 Bharatvarsh எனும் யூடியூப் சேனல் “டெல்லி போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர் ஆசிப் கான் கைது செய்யப்பட்டார். ஷாஹீன் பாக் | டிவி9டி” என்னும் தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் “காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கான் சப்-இன்ஸ்பெக்டரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஆசிப் கான் சப்-இன்ஸ்பெக்டரை திட்டுவதும், தள்ளுமுள்ளு செய்வதும் காணப்பட்டது. வீடியோ வெளியானதை அடுத்து, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.” என்று வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்காணும் வீடியோவை ஆய்வு செய்ததில், ஆசிப் கான் ஜிந்தாபாத் என்று அங்குள்ள ஆதரவாளர்கள் கோஷமிடுவதை வீடியோவின்1:29 நிமிடத்தில் தெளிவாக கேட்க முடிந்தது.
இதுகுறித்து, 2022 நவம்பர் 26 அன்று இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரையில், “முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிப் முகமது கான், போலீசாரை தாக்கியதற்காகவும், தவறாக நடந்து கொண்டதற்காகவும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
250 வார்டுகளுக்கான MCD (Municipal Corporation of Delhi) எனப்படும் டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி கூட்டத்தை நடத்தியதற்காக விசாரிக்க சென்ற காவலர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ANI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,”நேற்று தயாப் மஸ்ஜித் பகுதிக்கு அருகே காவல்துறையினர் ரோந்து சென்ற போது மக்கள் கூட்டத்தை கவனித்தனர். MCD தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளராக நின்ற அரிஃப் கானின் தந்தையான ஆசிப் முகமது கான் தனது ஆதரவாளர்களுடன் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினர்: டெல்லி போலீஸ்” என்று குறிப்பிட்டுள்ளது.
During patrolling near Tayyab Masjid area yesterday, police constable noticed a gathering. One Asif Mohd Khan, father of Congress MCD Counselor candidate Ariba Khan along with his supporters was addressing the gathering using loud hailer: Delhi Police
(Screengrab of viral video) pic.twitter.com/ownec4cHMs
— ANI (@ANI) November 25, 2022
முடிவு:
நம் தேடலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ 2022 நவம்பர் 26 அன்று டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்த வீடியோவில் கூட்டத்தினர் ‘ஆசிப் கான் ஜிந்தாபாத்‘ என்று கோஷமிட்டதை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றுக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.