பாலஸ்தீன பெண் சாரா கனடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறாரா ?

பரவிய செய்தி
இந்த பாலஸ்தீனிய சிறுமி ஸாராவின் வீட்டை 2003 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் இடித்துத் தள்ளிய போது தனது பாடப் புத்கங்களை சுமந்த வண்ணம் அழுது கொண்டிருந்தாள். இன்று மொழியியல் துறையில் எம்.ஏ பட்டம் பெற்று, கனடாவிலூள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசியையாக கடைமையாற்றி வருகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
2003-ம் ஆண்டு இஸ்ரேல் படைகளின் தாக்குதலின் போது தனது பாடப் புத்தகங்களை சுமந்த வண்ணம் அழுது கொண்டு இருக்கும் பாலஸ்தீன சிறுமி சாரா, தற்போது கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருவதாக குழந்தை மற்றும் இஸ்லாமிய பெண் ஒருவரின் புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பாலஸ்தீனிய சிறுமி ஸாராவின் வீட்டை 2003 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் இடித்துத் தள்ளிய போது தனது பாடப் புத்கங்களை சுமந்த வண்ணம் அழுது கொண்டிருந்தாள்.
இன்று மொழியியல் துறையில் எம்.ஏ பட்டம் பெற்று, கனடாவிலூள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில்பேராசியையாக கடைமையாற்றிவருகிறார pic.twitter.com/QHoZHqFH8Y
— Hussain (@Hussain79220706) June 6, 2022
உண்மை என்ன ?
குழந்தையின் புகைப்படத்தில் உள்ள “Fadi A Thabet ” எனும் வாட்டர் மார்க் வைத்து தேடிய போது, 2019ம் ஆண்டு ஜூன் மாதம் Fadi A Thabet எனும் புகைப்படக் கலைஞர் தனது சமூக வலைதள பக்கங்களில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
2019-ல் பாலஸ்தீனப் புகைப்படக் கலைஞர் ஃபாதி ஏ தபெத் தன் முகநூல் பக்கத்தில், வைரல் செய்யப்படும் தகவல் தொடர்பான விளக்கத்தை பதிவிட்டு இருக்கிறார். பெண் குழந்தையின் புகைப்படம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டது என்றும், அருகே உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண் ஈரானைச் சேர்ந்த சூசன் ஹமித் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ஈரானைச் சேர்ந்த சூசன் ஹமித் Human development and genration of social value என்ற அமைப்பின் நிறுவனர். இவர் 2013-ல் TEDx Talks-ல் தனது வெற்றிப் பயணத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், 2003-ல் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி சாரா தற்போது கனடா பல்கலைக்கழத்தில் பேராசிரியராக இருப்பதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. வைரல் செய்யப்படும் கதையுடன் இணைக்கப்பட்ட முதல் புகைப்படம் 2013-ல் ஈராக் பெண் TEDx Talks தளத்தில் பேசிய போது எடுக்கப்பட்டது, இரண்டாவது படம் 2019-ல் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.