பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் இருந்து வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்.
மதிப்பீடு
விளக்கம்
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் இருந்து வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக சமூக வலை தளத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ உள்ளதாக வதந்திகள் பரவி மக்கள் அச்சமடைந்து இருந்தனர். எனினும், வதந்தி பரப்பியவரை பெங்களூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக வந்த தகவலால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால், அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை.. வதந்திகளை பரப்பி உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பேசிய எஸ்.பி ஓம் பிரகாஷ் , ” பாம்பன் பாலத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக வரும் செய்திகள் வதந்தியே. மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். கடற்படையினரும் பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்”.
மேலும், Youturn தரப்பில் இருந்து எஸ்.பி ஓம் பிரகாஷ் உடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ராமேஸ்வரத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக பரவுவது வதந்தியே என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பாம்பன் பாலத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக வரும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம், அச்சமடைய வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.