This article is from Feb 23, 2019

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரருக்கு சாதி காரணமாக இடம் மறுப்பா ?

பரவிய செய்தி

புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர் தலித் என்பதால் உடலை தங்கள் தெரு வழியே கொண்டு செல்ல விடாத ஒரு பிரிவினர்- உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்.

மதிப்பீடு

சுருக்கம்

2016-ல் நடந்த பம்போரே தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் வீர் சிங் இறுதி சடங்கிற்கு பொது இடத்தை வழங்க மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், புல்வாமா தாக்குதல் என தவறாக பரவி வருகிறது.

விளக்கம்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் இறந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், உத்தரப்பிரதேசத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் உடலை ஒரு பிரிவினர் தங்கள் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என்ற செய்தி சில இணைய பக்கங்களில் வெளியாகியுள்ளது.

பம்போரே தாக்குதல் :

2016 ஜூன் மாதம் காஷ்மீரின் பம்போரேவில்(Pampore) நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இறந்த 8 வீரர்களில் வீர் சிங் என்ற சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டேபிளும் ஒருவர்.

வீர் சிங் உடல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஃரோஸாபாத் மாவட்டத்தின் சிகொஹபாத் அருகே உள்ள நக்லா கேவால் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அக்கிராமத்தில் வீர் சிங் உடலை பொது இடத்தில் தகனம் செய்ய அங்கிருந்த ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். சாதிப் பிரிவினைக் காரணமாக வீர் சிங் இறுதி சடங்கு தடைப்பட்டது.

” பின், மாவட்ட அரசு அதிகாரிகள் தலையீடுகளுக்கு பின்பு வீர் சிங்கின் இறுதி சடங்கிற்கு 10-க்கு 10 மீட்டர் இடம் வழங்குவதாக கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறினர். நீண்ட நேர பேச்சுக்கு பிறகே கிராம மக்கள் வீர் சிங் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று இடம் வழங்கி உள்ளனர் “.

இதன் பின் ஜிலா பஞ்சாயத்தின் தலைவர் விஜய் பிரதாப், இறந்த வீரர் வீர் சிங் நினைவாக கிராமத்தின் நுழைவு பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

முடிவு :­

சி.ஆர்.பி.எஃப் வீரர் வீர் சிங் உடலுக்கு பொது இடத்தில் இறுதி சடங்கு செய்ய மறுத்து பின் இடமளித்து உள்ளனர். அங்கு சாதிப் பிரிவினை இருந்தது உண்மை.

ஆனால், இச்சம்பவம் 2016 ஜூன் மாதத்தில் நடந்தது. பரவிய செய்தியில் கொடுக்கப்பட்ட லிங்க்-ல் கூட பம்போரே தியாகி எனக் இடம்பெற்றுள்ளதை பார்க்காமல் பகிர்ந்து உள்ளனர். இதை காஷ்மீர் புல்வாமா தாக்குதல் உடன் தொடர்புப்படுத்தி தவறாக பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader