ரங்கராஜ் பாண்டே நியூஸ் 7 சேனலில் இணைகின்றாரா ?

பரவிய செய்தி
தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே நியூஸ் 7 சேனலில் இணைகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தியாளராக இருந்த திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகினார். அரசியல் பிரபலங்களிடம் மேற்கொண்ட நேர்காணல் மூலம் ரங்கராஜ் பாண்டே பிரபலமாகியவர்.
ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியை விட்டு விலகிய பிறகு பிற செய்தி நிறுவனங்களில் இணைந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நியூஸ் 7 செய்தி நிறுவனம் ரங்கராஜ் பாண்டே புகைப்படத்துடன் “ பாண்டே பராக் பராக் “ என வாசகத்துடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து, பாண்டே நியூஸ் 7 சேனலில் இணைந்து விட்டார் என செய்திகள் பரவத் துவங்கியது. Youturn-யிடமும் பலரும் இக்கேள்வியை முன் வைத்தனர்.
இது தொடர்பாக, YOUTURN சார்பில் விவரங்களை அறிய நியூஸ் 7 சேனலைத் தொடர்பு கொண்ட போது திரு. ரங்கராஜ் பாண்டே பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மட்டுமே என தெரிவித்து உள்ளனர்.
நியூஸ் 7 சேனலில் பாண்டே சிறப்பு நேர்காணலில் மட்டுமே பங்கேற்க உள்ளார். தற்போது அஜித் குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் பாண்டே நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.