This article is from Jul 04, 2018

பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள குழந்தை இவங்களா ?

பரவிய செய்தி

பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட் கவரில் உள்ள நீறு தேஷ்பாண்டே என்ற குழந்தைக்கு இப்பொழுது 65 வயதாகி விட்டது.

மதிப்பீடு

விளக்கம்

1990 காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பிஸ்கட் என்றால் அது பார்லி-ஜி தான். ஒரு கப் டீயுடன் பார்லி-ஜி பிஸ்கடை தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே தனி என்று கூறுவார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பார்லி-ஜி பிஸ்கட் குழந்தைகளை கவரும் விதத்தில் அந்த பிஸ்கட் பாக்கெட்களில் ஜி என்றால் ஜினியஸ் என்று விளம்பரம் செய்தார்கள். குறிப்பாக, அதனுடன் இலவசமாக வழங்கப்படும் சக்திமான் ஸ்டிக்கர்க்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். சக்திமான் ஸ்டிக்கர்காக பார்லி-ஜி பிஸ்கட் வாங்கிய வரலாறே இங்குண்டு.

மேலும், அந்த பிஸ்கட் பாக்கெட்களில் இருந்த குழந்தையின் உருவம் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அழகாக அமைந்து இருக்கும். சமீப சில ஆண்டுகளாக அந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை அதிகம் காண முடிகிறது.

பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள குழந்தையின் பெயர் நீறு தேஷ்பாண்டே என்றும், அக்குழந்தைக்கு இப்பொழுது 65 வயதாகி விட்டது என்று கூறி ஒருவரின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது . இந்த பார்லி-ஜி குழந்தையை தொடர்புப்படுத்தி பல பெயர்களுடன் கதைகளை கூறியுள்ளனர்.

உண்மை என்ன ?

” பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள குழந்தையின் பெயர் நீறு தேஷ்பாண்டவும் இல்லை அவருக்கு 65 வயதாகி விட்டது என்று கூறுவதும் உண்மையில்லை. அந்த குழந்தையின் படமானது 1960 இல் எவரஸ்ட் கிரியேட்டிவுஸ் என்பவர்களால் தத்துருவமாக உருவாக்கப்பட்டது என பார்லி-ஜியின் product manager மாயக் சாஹ் தெரிவித்துள்ளார். அக்குழந்தையின் படம் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது “.

பரவும் புகைப்படத்தில் இருப்பவர் ?

இதற்கு முன்பாக ஒரு வயதான பெண் உடைய புகைப்படத்தை இணைத்து பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் குழந்தை எனப் பதிவிட்டு வந்தனர். தற்பொழுது, வேறொருவரின் புகைப்படத்தை இணைத்து பகிர்ந்து வருகின்றன.

ஆனால், அப்புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் நீறு தேஷ்பாண்ட அல்ல, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான சுதா மூர்த்தி. பார்லி-ஜி கதையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் Mehta Publishing House என்ற வலைப்பதிவில் 2013 ஜனவரியில் பதிவாகி உள்ளது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் குழந்தையின் தற்போதைய புகைப்படம் என வைரலாகும் புகைப்படங்கள் அனைத்தும் தவறான தகவல்களே. பார்லி-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் குழந்தை ஒரு கற்பனையான வடிவமே ! உண்மையான குழந்தை அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader