கொத்தமல்லித்தழை கட்டில் பார்த்தீனியம் இலைகளா…எச்சரிக்கை !

பரவிய செய்தி

முதல் படம் கொத்தமல்லி, இரண்டாவது படம் பார்த்தீனியம் எனும் விஷயச் செடி. நாம் வாங்கும் கொத்தமல்லி கொத்தில் கலந்து வருகிறது. இதனை நீக்கி பயன்படுத்துங்கள். கவனிக்காமல் அதிகமாக உபயோகப்படுத்தினால் இனம் புரியாத தோல் வியாதி, ஆஸ்துமா, மூட்டு வலி, கிட்னி பிரச்சனை வரும்.

 

மதிப்பீடு

சுருக்கம்

பார்த்தீனியம் எனும் நச்சுத்தன்மை கொண்ட களைச்செடி தீமை விளைவிக்கும் செடியாக நாடு முழுவதிலும் பரவிக் கிடக்கிறது. கொத்தமல்லி கட்டுகளில் இதனை பார்த்தால் நீக்கி விடுங்கள். கொத்தமல்லிக்கும், பார்த்தீனியத்திற்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளுங்கள்.

விளக்கம்

நம்மில் பலர் பார்த்தீனியம் எனும் பெயரை பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தேசிய அளவில் தீமை அளிக்கும் பார்த்தீனியம் எனும் களைச் செடியை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. பார்த்தீனியம் வெறும் களைச்செடி மட்டுமல்ல நச்சுத்தன்மை கொண்ட செடியாகும்.

Advertisement

பார்ப்பதற்கு கொத்தமல்லிதழை போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்தீனியம் இலைகள் வயல்வெளிகள், வரப்புகள் உள்ளிட்ட விவசாய நிலங்கள், சாலையோரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் களைச்செடியாக பரவி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். நச்சுத்தன்மை, அதிக விதை உற்பத்தி திறன், பிற தாவரங்களை வளர விடாமல் அழிக்கும் தன்மை போன்ற காரணத்தினால் பார்த்தீனியம் களைச்செடி தேசிய அளவில் தீமை விளைவிக்கும் செடியாக கருதப்படுகிறது.

1954-ம் ஆண்டில் உணவு பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் பட்டினி மற்றும் சத்துக்குறைப்பாட்டை போக்க சட்டப்படி இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கோதுமையை மும்பை துறைமுகம் வழியாக கொண்டு வந்தது. அந்த சமயத்தில் தான் தீங்கு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி நுழைந்ததாக கூறப்படுகிறது. மெக்சிகோ வளைகுடா பகுதியில் தோன்றிய பார்த்தீனியம் செடிகள் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியப் பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பார்த்தீனியம் செடிகளுக்கு அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்யும் திறன் உண்டு. ஒரு பார்த்தீனியம் செடியால் 10,000 முதல் 15,000 வரையிலான நல்ல முளைப்பு திறன் கொண்ட விதைகளை உருவாக்க முடிகிறது. இதன் காரணமாகவே நாடு முழுவதும் வேகமாக பரவுகிறது. இந்திய அளவில் சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு பார்த்தீனியம் செடிகள் பரவி தீங்கு விளைவித்து வருகிறது.

பார்த்தீனியம் களைச்செடியில் இருக்கும் பார்த்தீரின், ஹிஸ்டிரின், ஹைமினின் மற்றும் அம்புரோசின் உள்ளிட்ட நச்சுக்கள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்களை பரப்பக்கூடியவை. மேலும், விளைநிலங்களில் பரவி விளைச்சலை பாதிக்கிறது. மண்ணின் தன்மையை கெடுக்கிறது, வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகிறது.

Advertisement

கொத்தமல்லிதழை கட்டுக்குள் பார்த்தீனியம் இலைகள் கலந்து வருவதாக கூறப்படுகிறது. களைச்செடிகளாக வளர்வதாலும், பார்ப்பதற்கு கொத்தமல்லி போன்றே இருப்பதாலும் எளிதாக கொத்தமல்லிதழையுடன் கலந்து நம் வீட்டின் சமையல் அறைக்கு வந்து விடுகிறது. இதனை அதிக அளவில் சமைத்து உண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனக் கூறுகிறார்கள்.

2009-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு பார்த்தீனியம் களைச்செடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த களைச்செடிகளை ஒழிக்க தமிழக அரசின் உத்தரவின்பேரில் வேளாண்துறை சார்பில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பார்த்தீனியம் செடி ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

பார்த்தீனியம் இலைகளுக்கும், கொத்தமல்லிதழைக்கும் இருக்கும் வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். படத்தில் இரண்டையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்கலாம். அனைத்து கொத்தமல்லிதழை கட்டிலும் பார்த்தீனியம் இருப்பதாக கூறி விட முடியாது. எனினும், களைச்செடி என்பதால் இரண்டும் ஒன்றாக கலந்து வர வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இரண்டையும் பிரித்து பார்த்து, கொத்தமல்லிதழை கட்டை சோதித்த பின் உணவிற்கு பயன்படுத்துங்கள்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close