பதஞ்சலி நிறுவனம் பீப் பிரியாணி மசாலாவை விற்பனை செய்கிறதா ?

பரவிய செய்தி

பதஞ்சலி பீப் பிரியாணி மசாலா விற்பனை.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பல கோடி மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனமான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அழகு சாதன பொருட்கள், ஆயுர்வேத மருந்து மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலியின் பங்குகள் 2022ம் ஆண்டு செப்டம்பர் 20, 21ம் தேதிகளில் உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் லோகோ இருக்கும் பீப் பிரியாணி மிக்ஸ் பேக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது,  வால்மார்ட்(walmart) வலைப்பக்கத்தில் நேஷனல்(National) என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளே கிடைத்தது. அந்த பாக்கெட்டில் பதஞ்சலி என்ற வார்த்தை எங்கும் இல்லை.

மேற்கொண்டு தேடுகையில், அது நேஷனல்(National) நிறுவனத்தின் வலைப்பக்கத்திற்கு கொண்டு சென்றது. அந்த நிறுவனம் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டது தெரியவந்தது. அந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருப்பதும் அவை பாகிஸ்தான் உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதில்  பீப் பிரியாணி மிஃஸ்-ம் ஒன்று.

இந்த நிறுவனத்தின் பீப் பிரியாணி மிக்ஸ் தயாரிப்பில் பதஞ்சலி லோகோ மற்றும் ராம்தேவின்  பெயர் உள்ளிட்டவை இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பதஞ்சலி நிறுவனம் பீப் பிரியாணி மசாலா மிக்ஸ் விற்பனை செய்வதாகப் பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டது. நேஷனல் நிறுவனத்தின் பீப் பிரியாணி மிக்ஸ் தயாரிப்பில் பதஞ்சலி நிறுவனத்தின் லோகோ மற்றும் ராம்தேவின் பெயரை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader