பெரியார் கட்டிடம் கட்ட யாகமா ?

பரவிய செய்தி
பெரியார் பில்டிங் கட்ட அடிக்கல் நாட்டிய அற்புத தருணம்.. அடிக்கல் நாட்டிய போது மந்திரங்கள் ஓத யாகம் வளர்த்த திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வழக்கில் இருந்து மீண்டு வர அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தால் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு .
2014-ல் திருப்பூரில் உள்ள நவக்கிரக கோவில்களில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு, கணபதி ஹோமம் பூஜை நடந்தது.
அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பூஜையில் திருப்பூர் மேயர், துணை மேயர் மற்றும் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
கருப்பு சட்டை அணிந்ததால் திராவிட கழகத்தால் நடத்தப்பட்ட பூஜை என தவறான செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
கூடுதல் தகவல் :
பெரியாருக்கு நினைவரங்கம் கட்ட தி.க அமைப்பினர் பூமி பூஜை நடத்தியதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பரவிய தவறான புகைப்படத்தை பாஜகவினர் மீண்டும் பரப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.